Wednesday, September 17, 2014

நான் வளர்கி​றே​னே மம்மி



மாமா ​வைத்த பிறந்த நாள் விருந்தில்....

இன்னிக்கு பிறந்த மாதிரி இருக்கு அதுக்குள்ள 5 வயசு முடிஞ்சிடுச்சு லக்சனுக்கு. ​ரொம்ப சந்​தோசம் ஆனா உள்ளுக்குள்ள ​ரொம்ப வருத்தம் எனக்கு. அவன் சின்னதா​வே இருக்ககூடாதானு (lol).அவனு​டைய ​குழந்​தைதனம் ம​றைஞ்சு ​கிட்​டே வருது. கவிதாயினி (மயக்குறு மகள்) மற்றும் உமாநாத்(​தேவ​தை வாழும் வீடு) எழுதும்​போது நான் நி​னைச்சுக்கு​வேன் என் மக​னை பற்றி எழுதசிறந்த த​லைப்பு ​சேட்​டை.அந்த அளவு அவனு​டைய ஆட்டம் இருக்கும்.சிறு குழந்​தையா இருக்கும்​போது எப்படா ​பெரிசாவான் ​கொஞ்சமாச்சும் ரகளை கு​றையும்னு இருந்துச்சு ஆனா இப்ப ஏன்டா ​பெரியவனா ஆகறான்னு இருக்கு.​சேட்​டை பல ​செஞ்சாலும் க​டைசில சில டயலாக்ல அப்டி​யே மறக்க வச்சிடுவான்.

உதாரணத்துக்கு சில..
கங்காணி - சின்ன குழந்​தையா இருக்கும் ​போது ​பேச்சு பழகும் சமயம் அடிக்கடி கங்காணினு ​சொல்லுவான் அது என்னனு கண்டுபிடிக்க பல நாள் ஆச்சு. என் அப்பா கண்ணாடி ​போடுவாரு அ​தைதான் அவன் கங்காணினு ​சொல்லி இருக்கான்.
உப்புமா லட்டு - ​போன மாசம் அம்மாகிட்ட ​தொ​லை​​பேசியில ​பேசும்​போது உனக்கு என்ன ஸ்வீட் ​​வேணும்னு ​கேட்டதுக்கு உப்புமா லட்டு மட்டும் ​செஞ்சு ​வெக்க ​சொல்லறான்
​பெட்சீட் புளு -  அ​தைவிட ஒரு நாள் ஓடி வந்து இங்க வந்து பாரும்மா புழு ​பெட்சீட் வந்திருக்குன்னு ​சொல்ல நான் ஏ​தோ ​சொல்லறான்னு எட்டி பார்த்தா அது கம்பளி புழு..இப்படி வார்த்​தைக​ளை எங்கிருந்​தோ ​தேடி புது வார்த்​தைக​ளை உருவாக்கிட்டு இருக்கான். இந்த மழ​லை எல்லாம் ​கொஞ்ச நாள்தான்னு நி​னைக்கயில வருத்தமா இருக்கு. முதல்ல பள்ளியில ​கொண்டு விட்டா பல தட​வை முத்தம் ​கொடுத்து சீக்கிரமா வந்துடுமா வந்துடும்மானு ​சொல்லுவான் ஆனா இப்ப ​ஒன்னும் கண்டுக்கற​தே இல்ல ​வேகமா ​போயி நண்பர்கள்கிட்ட ​சேர்ந்திடறான். ம்ம்ம் ......

அ​தே ​போல ​​வெளிய எங்க ​போனாலும் ஓடி வந்து நானும் வ​ரேனு அடம் பிடிச்சு முத்தம் ​கொடுத்து சமாதானம் பண்ணிதான் கிளம்பனும் இப்ப நிலம ​ரொம்ப ​மோசம் "கண்​​ணே அம்மா ​​போயிட்டு வ​ரேன்" உள்ள இருந்​தே "ஓ ​கே ​பை வரும்​போது கிண்டர் ஜாய் வாங்கிட்டு வந்திடு" இவ்வளவுதான் முடிஞ்சுது.
அது மட்டுமா பாடம் படிக்க ​​சொன்னா ​போதும் பசி எடுக்கு​ம், தூக்கம் வரும், பாத்ரூம் வரும் அல்லது ​கை வலிக்கும் இ​தெல்லாம் யார் ​சொல்லித்தறாங்கனு ​தெரியல ​ஆனா க​ரெக்டா ​செய்யறான்.
அவன் வளர வளர நம்ம விட்டு தூரமா ​போறமாதிரி ஒரு பீலிங் இருக்கு இருந்தாலும் குழந்​தை வளர்ரத பார்க்க சந்​தோசமாவும் இருக்கு. ம்ம் 

என்ன பண்ண நான் இப்டி புலம்புனா என் அம்மா ​கேட்கறாங்க இப்டிதான எங்களுக்கும் இருக்கும் இப்டி வளர்த்து எல்லாம் பண்ணதுக்கு அப்புறம் விட்டுட்டு ​வெளிநாட்டுல ​போயி உக்காந்துக்கிட்டு அடுத்த வருசம் வ​ரேன் அப்ப வ​ரேன் இப்ப வ​ரேனு ​சொல்லிகிட்​டே இருக்கீங்கள்ள அப்டினு ​கேட்கறாங்க ம்ம் அதும் சரிதான் நாம இன்னிக்கு பண்றத நா​ளைக்கு நம்ம பசங்க பண்ண ​போறாங்கனு மனச ​தேத்திக்க ​வேண்டியதுதான்.

Thursday, February 21, 2013

ஜான்சிபார் - 4

​​கேப்டன் காருலயே கிளம்பி கூட்டிகிட்டு போனாங்க. காட்டுக்குள்ள அரை மணிநேர பயணம். அதுக்குள்ள சிட்டிய தாண்டின உடனே எங்க வீட்டுகாரருக்கு ஆசை கார் ஓட்டனும்னு டி​ரைவர்  கிட்ட கேட்டு அவனும் குடுத்திட்டு பின்னாடி உக்கார்ந்துகிட்டான். அவருக்கு நல்லா கார் ஓட்ட தெரியும் இருந்தாலும் வெளி நாட்டுல ஓட்டனும்னு ஒரு ஆசை அது நிறைவேறிடுச்சு. கிட்டதட்ட 30 கீ மீட்டர் ஒட்டுனாரு. அப்புறம் ஒருதோப்பு மாதிரி இடத்துல நிறுத்திட்டு ஒரு ஆள கூட்டிகிட்டு வந்தான். அவன்தான் அந்த ஸ்பைஷ் டூர் இடத்துக்கு சொந்தகாரன்.

முதல்ல ஸ்பைஷ் டூர்னா என்னனா எல்லாவித மசாலா செடி, மரம், கொடி இதெல்லாம் நேர்ல பார்க்கலாம். இதுல அந்த கைடு அவருடைய சொந்த பண்ணைக்கு கூட்டிகிட்டு போயி சுத்தி காட்டுனாரு.அந்த பண்ணைல நிறைய விதம் விதமான மசாலா மரங்கள் இருந்துச்சு எல்லாம் இந்த மாதிரி டூரிஸ்ட்காரங்களுக்கு காட்டறதுக்காகவே வெச்சு இருக்காங்க.

மசாலா மரங்களின் ராணி (Queen of Spices)

முதல்ல ஒரு மரத்துக்கு பக்கத்துல கூட்டி கிட்டு போயி இது என்னனு பாருங்கனு சொன்னாரு. மரத்தை பார்த்தா ஒன்னும் தெரியல சாதாரணமா இருந்துச்சு இலைகள் மட்டும் பெரிசு பெரிசா இருந்துச்சு. பேசிகிட்டே அவன் மரத்தோட பட்டைய கத்தில வெட்டி எடுத்து சாப்பிடுங்கனு சொன்னாரு. சாப்பிட்டா அட நம்ம ஊரு பட்டை பிரியாணிக்கு போடுவோமே அதே தான் ஆனா பச்சையா நல்லா இனிப்பா மணமா இருந்துச்சு. அப்புறம் அவரு கொஞ்சம் இலைகளை பறிச்சு மணம் பார்க்க சொன்னாரு. அது  நம்ம பிரியாணி இலைனு தெரிஞ்சு கிட்டோம். அதுக்கு பிறகு அவரு கத்தியால அந்த மரத்தோட வேறவெட்டி எடுக்க ஆரம்பிச்சாரு. அய்யோ பாவம் அந்த மரம்னு நினைச்சு கிட்டோம். கடைசியா அதை முகர்ந்து பார்க்க குடுத்தாரு. அட எல்லாருக்கும் அதிர்ச்சி அது என்னனா நம்ம விக்ஸ் யூஸ் பண்ணறமே அதேதான். விக்ஸ் அந்த மர வேருல இருந்துதான் செய்யறாங்களாம். கடைசியா சொன்னாரு இந்த மரம்தான் மசாலாக்களின் ராணி (Queen of Spice trees). இந்த மரத்தோட எல்லா பாகமும் உபயோகப்படுது.

அடுத்தது ஒரு சின்னசெடி அது நம்ம ஊரு புல்லு மாதிரிதான் இருக்கு அதை வெட்டி முகர்ந்து பார்த்தா எலுமிச்சை மாதிரி மணம் வருது. அதுல டீ  வெச்சு குடிச்சா உடம்புக்கு ரொம்ப நல்லதாம் அது வாந்தி அஜீரணம் இதுக்கெல்லாம் நல்ல மருந்துனு சொன்னாரு.

அப்புறம் மஞ்சள், இஞ்சி, வெற்றிலை இதெல்லாம் எங்க நாட்டுலயே இருக்குது பார்க்க வேண்டாம் வேற காட்டுனு கேட்டோம் அப்புறமா ஒரு மரத்துக்கு கூட்டிட்டு போயி ரோசு கலர்ல ஒரு காய் கொத்தா பறிச்சுட்டு வந்தாரு. என்னனு பார்த்தா கிராம்பு. கிராம்பு பச்சையா இருக்கும்போது சிவப்பு கலர்ல நல்லாதான் இருக்கு அது பழுத்து காய்ந்த பிறகு தான் கருப்பா மாறுது.

அப்புறம் ஏலக்காய்செடி நம்ம ஊருல இருக்குது ஆனா நாங்க இது வரைக்கும் பார்த்தது இல்ல அதனால நல்லா பார்த்து போட்டோ எடுத்துகிட்டு வந்தோம். அப்புறம் ஒருபெரிய கொடிகிட்ட கூட்டிட்டு போயி அதுல சின்னதா நீளமா நம்ம பீன்ஸ் மாதிரி ஒரு காய் ஆனா கருப்பு கலர்ல இருந்துச்சு இதை பார்த்திருக்கீங்களானு கேட்டாரு. இல்லைனோம். அவரு சொன்னாரு இதுதான் வெண்ணிலா (Vanilla) அப்படினாரு. முகர்ந்து பார்த்தா வெண்ணிலா வாசனை சூப்பரா வந்தது. நான் எதிர் பார்க்கவே இல்ல. வெண்ணிலா இப்படி கருப்பு கலர்ல இருக்கும்னு. நான் சாப்பிட்ட வெண்ணிலா கேக் வெண்ணிலா ஐஸ்க்ரீம் எல்லாமே வெளிர் மஞ்சளாதான் இருந்தது.
இதெல்லாம் பார்த்த பிறகு அவங்க குடிசைக்கு கூட்டிகிட்டு போயி ஆளுக்கு ஒரு கப்பு குடுத்தாங்க. அதுல முதல்லலெமன் க்ராஸ் டீ, அப்புறம் ஏலக்காய், வெண்ணிலா, இஞ்சி இப்படினு விதம் விதமா டீ குடுத்தாங்க. எல்லா டீயும் சூப்பரா இருந்துச்சு. அவங்க டீனா நம்ம ஊரு மாதிரி தேயிலை போட்டு இல்ல சும்மா கசாயம் மாதிரி தராங்க அவ்வளவுதான்.

கடைசியா கிளம்பி வரும்போது 3 பசங்க வந்தாங்க அவங்க கிட்ட கையிலதென்னை ஓலையிலசெஞ்ச கிரீடம், கழுத்துக்கு சங்கிலி, தோள்பை, இதெல்லாம் விட கண்ணுக்கு கண்ணாடி எல்லாம் செஞ்சுட்டு வந்து போட்டு விட்டாங்க. எல்லாத்தையும் போட்டா ஆதிவாசி மாதிரியே இருந்தோம். நல்லா புகைப்படங்கள் எடுத்து கிட்டு திரும்ப வந்தோம்.

திரும்ப வரும்போது மறுபடியும் எங்க வீட்டு காரர்தான் கார் ஓட்டுவேனு ஓட்டிகிட்டு வந்தாரு. அப்ப மெயின் ரோடு வந்தவுடன் அவன் நான் ஓட்டறேன். போலீஸ் பார்த்த பிரச்னைனு வாங்கிட்டான். அப்புறம் ஒரு சிக்னல்ல போலீஸ் காரன் வண்டிய ஓரம் கட்ட சொல்லிட்டான். என்னனு பார்த்தா நான் முன்னாடிதான் உக்கார்ந்து இருந்தேன். ஆனா சீட் பெல்ட் போடவே இல்ல. அதான் பிடிச்சுட்டானு  நினைச்சு கிட்டோம். டிரைவர் எதுக்கும் 1000 சில்லிங்  குடுங்கனு சொல்லி வாங்கி வெச்சுகிட்டான். அப்புறம் என்ன வழக்கம்போல இந்தியா மாதிரி அவரு விரல கார்குள்ள விட்டு பணத்த வாங்கிட்டு போலாம்னுட்டாரு. எல்லா ஊரு போலீசும் ஒரே மாதிரி தான் இருக்காங்க.

அப்ப மணி மாலை 4 தான் ஆச்சு இப்ப இருந்து நைட் வரைக்கும் என்ன பண்ணறதுனு யோசனை பண்ணிட்டு அவன் கிட்டயே ஐடியா கேட்டோம். அவன் ஸ்டோன் டவுன் (stone town) அதாவது சான்சிபார் மெயின் சிட்டி ஊரு பேரு ஸ்டோன் டவுன். அங்கதான் நாங்க தங்குன ஹோட்டல் ஹார்பர் எல்லாம் இருக்கு. அங்க ஒரு  ஸ்லேவ் சேம்பர் அப்புறம் ஓரு சர்ச் இருக்கு அங்கபோயிட்டு ரூமுக்கு போனா சரியா இருக்கும்னு சொன்னான். சரினு கார நேரா ஸ்லேவ் சேம்பர்க்கு விட்டோம். அது ஒரு பெரிய சர்ச் பக்கத்துல ஒருகோட்டை வீடு அவ்வளவுதான். முதல்ல சர்ச் போனோம் அங்க ஏதோ ப்ரேயர் நடந்திட்டு இருந்தது அதனால உள்ள போகல ஆனா கதை கேட்டோம். அங்க கடவுள் வெச்சு இருக்கற இடத்துலதான் முன் காலத்துல அடிமைகளுக்கு தண்டனை தருவாங்களாம். அவங்கள அடிச்சு அடிச்சு ரத்தம் அந்த இடத்தில எப்பவுமே சிவப்பா தங்கி இருக்குமாம். அதனால அந்த இடத்துக்கு ரெட் கார்பட்னு பேரு வெச்சிருக்காங்க. பிற்காலத்துல ஆங்கிலேயர் வந்து அங்க அடிமைகளின் நினைவா பெரிய சர்ச் கட்டி சாமி கும்புட்டு இருக்காங்க.
அந்த கதை கேட்டு மனசு ரொம்ப கனமா போச்சு. அப்புறம் அந்த கோட்டைக்கு உள்ள போனோம் இப்ப அந்த கோட்டைய ஹோட்டலா மாத்திட்டாங்க. அங்க நார்மலா பாக்கறதுக்கு பக்காவா அழகான கோட்டை நிறைய சாமான்களோ அழகா இருந்துச்சு. அதுக்கு கீழ ஒரு படிக்கட்டுபோகுது அதுல இறங்குனா ஒரு குகை மாதிரியான இடம் அங்க எந்த விதமான வசதியும் கிடையாது யாரும் தலை நிமிர்ந்து நிக்க முடியாது. குறுகலான இடம் அங்கதான் 100 கணக்கான அடிமைகள மாதக் கணக்குல அடைச்சு வெச்சிருக்காங்க. கொடுமையிலும் கொடுமையிது அங்க போயி நாங்களும் உக்கார்ந்து பார்த்தோம் புகைப்படம் எடுக்கறதுகுள்ள வேர்த்து விறுவிறுத்திடுச்சு.
அங்க எப்படி இருந்தாங்களோ அடிமைகள் பாவம். இந்த அரபு நாட்டுக்காரங்க நல்லா அனுபவிச்சு வாழ்ந்திருக்காங்க. எல்லா வேலைக்கும் அடிமைகள் அது போக அவங்கள வியாபாரம் செஞ்சு வர வருமானம் இப்படி நல்லா அனுபவிச்சு இருக்காங்க.
எப்படியோ ஒரு வழியா அடிமைகள் இடத்தை பார்த்திட்டு வந்து கார்காரன நீ கார் எடுத்துட்டு போய்க்கோ நாங்க அப்படியே நடந்து ஊர் சுத்தி பார்த்து கிட்டே ரூம் போய் சேர்ந்திடறோம்னு சொல்லி நடக்க ஆரம்பிச்சோம். கார்காரன் எங்கள நல்ல இடமா இறக்கி விடறேனு சொல்லி ஒரு இடத்துல இறக்கி விட்டான் அது எந்த இடம்னா ஒருபெரிய  ஹோட்டல் அதுக்கு முன்னாடியே கடல். சரியா நாங்க இறங்கும்போது சூரிய அஸ்தமனம் சூப்பரா இருந்துச்சு. அதை எல்லா வெள்ளைக்காரங்களும் படம் எடுத்துகிட்டு இருந்தாங்க. நாங்க மட்டும் சும்மா விடுவமா அந்த சூரியன வெச்சு மணிரத்னம் ரேஞ்சுக்கு ட்ரை பண்ணி படம் எடுத்தோம் கடைசில 2 படம்தான் தேறிச்சு. அப்படியே கிளம்பி வரும்போது ஒரு இன்டர்நெட்டு கடை கண்ணுல பட்டுச்சு  உடனே படங்கள கேமராவுல இருந்து டவுன்லோட் பண்ணலாம்னு உள்ள புகுந்து கேட்டோம் அங்க இருந்த பொண்ணு இதுக்கு பணம் எல்லாம் ஒன்னும் வேண்டாம் சும்மாவே பண்ணிக்கோங்கனு ரொம்ப பெரிய மனசு பண்ணி சொல்லிச்சு. சரினு டவுன்லோடு பண்ணறோம் பண்றோம் ஒரு மணிநேரம் ஆயிடுச்சு. எங்களுக்கு மனசு பொறுக்காம 20 ரூபாய் தாராள மனசோட குடுத்துட்டு வந்தோம். அதுக்கு பிறகு வர்ர வழில வேற ஒரு கோட்டை இருந்துச்சு. அதுக்குள்ள போனா அங்க அன்னிக்கு பாட்டு கச்சேரினு சரியான கூட்டம் சத்தம் வேறகொஞ்சநேரம் பார்த்திட்டு சாப்பிடற இடத்துக்கு வந்திட்டோம்.
திரும்ப வரும்போது மறுபடியும் எங்க வீட்டு காரர்தான் கார் ஓட்டுவேனு ஓட்டிகிட்டு வந்தாரு. அப்ப மெயின் ரோடு வந்தவுடன் அவன் நான் ஓட்டறேன். போலீஸ் பார்த்த பிரச்னைனு வாங்கிட்டான். அப்புறம் ஒரு சிக்னல்ல போலீஸ் காரன் வண்டிய ஓரம் கட்ட சொல்லிட்டான். என்னனு பார்த்தா நான் முன்னாடிதான் உக்கார்ந்து இருந்தேன். ஆனா சீட் பெல்ட் போடவே இல்ல. அதான் பிடிச்சுட்டானு  நினைச்சு கிட்டோம்.டிரைவர் எதுக்கும் 1000 சில்லிங்  குடுங்கனு சொல்லி வாங்கி வெச்சுகிட்டான். அப்புறம் என்ன வழக்கம்போல
இந்தியா மாதிரி அவரு விரல கார்குள்ள விட்டு பணத்த வாங்கிட்டு போலாம்னுட்டாரு.எல்லா ஊரு போலீசும் ஒரே மாதிரி தான் இருக்காங்க.

அப்ப மணி மாலை 4 தான் ஆச்சு இப்ப இருந்து நைட் வரைக்கும் என்ன பண்ணறதுனு யோசனை பண்ணிட்டு அவன் கிட்டயே ஐடியா கேட்டோம். அவன் ஸ்டோன் டவுன் (stone town) அதாவது சான்சிபார் மெயின் சிட்டி ஊரு பேரு ஸ்டோன் டவுன். அங்கதான் நாங்க தங்குன ஹோட்டல் ஹார்பர் எல்லாம் இருக்கு. அங்க ஒரு  ஸ்லேவ் சேம்பர் அப்புறம் ஓரு சர்ச் இருக்கு அங்கபோயிட்டு ரூமுக்கு போனா சரியா இருக்கும்னு சொன்னான். சரினு கார நேரா ஸ்லேவ் சேம்பர்க்கு விட்டோம். அது ஒரு பெரிய சர்ச் பக்கத்துல ஒருகோட்டை வீடு அவ்வளவுதான். முதல்ல சர்ச் போனோம் அங்க ஏதோ ப்ரேயர் நடந்திட்டு இருந்தது அதனால உள்ள போகல ஆனா கதை கேட்டோம். அங்க கடவுள் வெச்சு இருக்கற இடத்துலதான் முன் காலத்துல அடிமைகளுக்கு தண்டனை தருவாங்களாம். அவங்கள அடிச்சு அடிச்சு ரத்தம் அந்த இடத்தில எப்பவுமே சிவப்பா தங்கி இருக்குமாம். அதனால அந்த இடத்துக்கு ரெட் கார்பட்னு பேரு வெச்சிருக்காங்க. பிற்காலத்துல ஆங்கிலேயர் வந்து அங்க அடிமைகளின் நினைவா பெரிய சர்ச் கட்டி சாமி கும்புட்டு இருக்காங்க. அந்த கதை கேட்டு மனசு ரொம்ப கனமா போச்சு. அப்புறம் அந்த கோட்டைக்கு உள்ள போனோம் இப்ப அந்த கோட்டைய ஹோட்டலா மாத்திட்டாங்க. அங்க நார்மலா பாக்கறதுக்கு பக்காவா அழகான கோட்டை நிறைய சாமான்களோ அழகா இருந்துச்சு. அதுக்கு கீழ ஒரு படிக்கட்டுபோகுது அதுல இறங்குனா ஒரு குகை மாதிரியான இடம் அங்க எந்த விதமான வசதியும் கிடையாது யாரும் தலை நிமிர்ந்து நிக்க முடியாது. குறுகலான இடம் அங்கதான் 100 கணக்கான அடிமைகள மாதக் கணக்குல அடைச்சு வெச்சிருக்காங்க. கொடுமையிலும் கொடுமையிது அங்க போயி நாங்களும் உக்கார்ந்து பார்த்தோம் புகைப்படம் எடுக்கறதுகுள்ள வேர்த்து விறுவிறுத்திடுச்சு.அங்க எப்படி இருந்தாங்களோ அடிமைகள் பாவம். இந்த அரபு நாட்டுக்காரங்க நல்லா அனுபவிச்சு வாழ்ந்திருக்காங்க. எல்லா வேலைக்கும் அடிமைகள் அது போக அவங்கள வியாபாரம் செஞ்சு வரவருமானம் இப்படி நல்லா அனுபவிச்சு இருக்காங்க.எப்படியோ ஒரு வழியா அடிமைகள் இடத்தை பார்த்திட்டு வந்து கார்காரன நீ கார் எடுத்துட்டு போய்க்கோ நாங்க அப்படியே நடந்து ஊர் சுத்தி பார்த்து கிட்டே ரூம் போய் சேர்ந்திடறோம்னு சொல்லி நடக்க ஆரம்பிச்சோம். கார்காரன் எங்கள நல்ல இடமா இறக்கி விடறேனு சொல்லி ஒரு இடத்துல இறக்கி விட்டான் அது எந்த இடம்னா ஒருபெரிய  ஹோட்டல் அதுக்கு முன்னாடியே கடல். சரியா நாங்க
இறங்கும்போது சூரிய அஸ்தமனம் சூப்பரா இருந்துச்சு. அதை எல்லா வெள்ளைக்காரங்களும் படம் எடுத்துகிட்டு இருந்தாங்க. நாங்க மட்டும் சும்மா விடுவமா அந்த சூரியன வெச்சு மணிரத்னம் ரேஞ்சுக்கு ட்ரை பண்ணி படம் எடுத்தோம் கடைசில 2 படம்தான் தேறிச்சு. அப்படியே கிளம்பி வரும்போது ஒரு இன்டர்நெட்டு கடை கண்ணுல பட்டுச்சு  உடனே படங்கள கேமராவுல இருந்து டவுன்லோட் பண்ணலாம்னு உள்ள புகுந்து கேட்டோம் அங்க இருந்த பொண்ணு இதுக்கு பணம் எல்லாம் ஒன்னும் வேண்டாம் சும்மாவே பண்ணிக்கோங்கனு ரொம்ப பெரிய மனசு பண்ணி சொல்லிச்சு. சரினு டவுன்லோடு பண்ணறோம் பண்றோம் ஒரு மணிநேரம் ஆயிடுச்சு. எங்களுக்கு மனசு பொறுக்காம 20 ரூபாய் தாராள மனசோட குடுத்துட்டு வந்தோம். அதுக்கு பிறகு வர்ர வழில வேற ஒரு கோட்டை இருந்துச்சு. அதுக்குள்ள போனா அங்க அன்னிக்கு பாட்டு கச்சேரினு சரியான கூட்டம் சத்தம் வேற கொஞ்ச நேரம் பார்த்திட்டு சாப்பிடற இடத்துக்கு வந்திட்டோம். வழக்கம்போல சீபுட் (sea food) கடையில நல்லா இறால் மீன், பிட்சா, முட்டை
சப்பாத்தி சாப்பிட்டோம். சூப்பர் சாப்பாடு சாப்பிட்டுட்டு கிழம்பி ரூம்கு போலாம்னு வந்தாச்சு. அப்பதான் ஞாபகம் வந்திச்சு திரும்பி போக டிக்கட் வாங்கனும்னு. அப்படியே ஹார்பர் போயி டிக்கட் வாங்கிட்டு ரூம் வந்து சேர்ந்தோம்.

Thursday, February 07, 2013

ஜான்சிபார் -3

மூணாவது நாள் (09-08-2008)

 இன்னிக்கு கொஞ்சம் மெதுவா எழுந்திருச்சு குளிச்சு கிழம்பி வெளிய வறோம் அப்பவே நண்பர் தயவு செஞ்சு கப்பல்ல மட்டும் என்ன கூப்பிடாதீங்கனு ராகம் பாட ஆரம்பிச்சாரு. நாங்க ரெண்டு பேரும் அதெல்லாம் ஒன்னும் பிரச்னை இல்ல நீங்க தைரியமா வாங்கனு கூப்பிட்டுகிட்டு தான்சானியா டூரிசம் கம்பெனி ஆபீஸ் போயி சேர்ந்தோம். அங்க போனவுடனே அந்த ஆளு இப்பதான் ஒரு கப்பல் கிளம்புச்சு சரி பரவாயில்ல உங்களுக்காக நான் தனியா ஏற்பாடு பண்றேனு சொல்லி மூணு பேருக்கு டிக்கட் வாங்கிகிட்டு மதியம் சாப்பாடு நாங்களே தருவோம் அதாவது பழங்கள்தான் மதிய உணவு நான் போயி வாங்கிட்டு வரேனு எங்கள உக்காற வெச்சுட்டு அவன் போயிட்டான். நாங்க காத்திருக்கும் போதே ரெண்டு பேரு க்ரீஸ் நாட்ட சேர்ந்தவங்க வந்தாங்க அவங்க கூட அரை மணி நேரம் பேசிட்டு இருந்தோம். அவங்க கிட்ட இந்த மாதிரி நண்பர் பயப்படறாருனு சொன்னோம் அதுக்கு அவங்க இதெல்லாம் ஒருபெரிய விசயமா?

நாங்க ரெண்டுபேரும் டார்சலாம்ல இருந்து சான்சிபார்க்கு சின்ன படகுல தான் வந்தோம் அதும் கடல் அதிகம் கொந்தளிப்பா இருந்ததால மேல கீழ வந்துபோயி ஒரு வழியா நாலு மணிநேரம் கழிச்சு வந்தோம் நீங்க என்னடானா 20 நிமிசம் படகுல கண்ணுக்கு எட்டுற தூரத்துக்கு பயப்படறீங்க. தைரியமா போங்க ஒன்னும் ஆகாதுனு சொன்னாரு. இதுக்கு நடுவுல கேப்டன்னு சொல்லிக்கிட்டு ஒருத்தன் வந்து அறிமுகம் செஞ்சுகிட்டான். அந்த பையன்தான் எங்கள கூட்டிகிட்டு போக போறதா சொன்னான். அதுக்குள்ள ஆபீசரும் வந்திட்டாரு பழங்கள்ளாம் வாங்கிட்டு. சரினு நாங்க கிளம்பி கடற்ரைக்கு போனோம். நான் மனசுக்குள்ள பெரிய படகாதான் இருக்கும்னு நினைச்சு போயி நின்னாச்சு அதுக்கு அப்புறம் தான் அவன் ஓடி போயி ஒரு படகோட்டிய கூட்டிக்கிட்டு வந்தான். அந்த படகோட்டி கையில ஒரு மோட்டார் என்ன ஏதுனு கேட்டா அதுல தான் படகு ஓடும் படகுல வெச்சா யாராவது கழட்டி கிட்டு போயிடு வாங்கனு கழட்டி வீட்டுல வெச்சிருக்கோம் தேவைப்படும் போது வெச்சு ஓட்டு வோம்னு சொன்னான். எங்களுக்கு சிரிப்பா இருந்துச்சு. அப்புறம் கேப்டன் பையன் நான் உங்க கூட வர மாட்டேன் அந்த படகோட்டிதான் வருவான். அந்த ஒரு தீவுக்கு போயிட்டு 4 மணி நேரத்துல வந்திடோனும்னு சொன்னான். எங்களுக்கு ஒரே சாக் என்ன கொடுமையிது அந்த ஆளு 4 தீவுனுதான சொல்லி காசு வாங்கினான். இப்ப நீங்க 1 தீவுனு சொல்லறீங்னோம். அவன் இல்ல இல்ல 1 தீவுதான்னு சொல்ல சரி எப்படியோ ஒன்னு கூட்டிகிட்டுபோனு சமாதானம் ஆகி கிழம்பினோம்.

இதுல முக்கிய விசயம் என்னனா? சான்சிபார்ங்கற பெரிய தீவுக்கு பக்கத்தில குட்டி குட்டியா நிறைய  தீவுகள் இருக்கு. அதுல குறிப்பா 4  தீவுக்குதான் பயணிகள் போவாங்க. அது என்ன என்னனா?

க்ரேவ் தீவு இங்கதான் அந்த காலத்துல பிரிட்டீஸ் அதிகாரிங்கள அடக்கம் செஞ்சிருக்காங்க அதனால இதுக்கு கல்லறை தீவுனு பேரு அதுபோக இங்க நிறைய வவ்வால் இருக்குது இந்த தீவுல மனிதர்கள் யாரும் இருக்கறது இல்ல வெறும் பயணிகள் மட்டும் வந்துபோறாங்க அவ்வளவுதான்.

ஸ்நேக் தீவு இது சின்ன தீவுதான் ஆனா இதோட வடிவம் கேக் மாதிரி இருக்கும் அதாவது கடல்ல இருந்துசெங்குத்தா இருக்கறதால இதுல யாரும் இறங்க முடியாது. அந்த தீவ சுத்தி படகுல போயிட்டு வரலாம் அவ்வளவுதான். இந்த தீவுல நிறைய பாம்புகள் இருக்கறதா சொல்லறாங்க ஆனா யாரும் இறங்கி பார்த்தது இல்ல.

சாண்ட் தீவு இது வெறும் மணல் திட்டு அவ்வளவு தான் நல்லா நீச்சல் அடிக்கவும் வெயில் காயவும் மட்டும் பயன் படுது அவ்வளவுதான். அந்த தீவுலவேற ஒன்னும் கிடையாது.
ப்ரிசன் தீவுங்கறதுதான் முக்கியமான பெரிய தீவு இங்க முக்கியமா ஆமைகள் அதாவது உலகத்துலயே பெரிய ஆமைகளை வளர்த்திட்டு இருக்காங்க அதுபோக ஒரு  ஹோட்டல் இருக்கு முக்கியமா நல்ல கடற்கரை இருக்குது இங்க நீச்சல் அடிக்க அருமையா இருக்கும். இங்கதான் எங்கள கூட்டிக்கிட்டுபோனாங்க.

இப்ப படகுல ஏறலாம்னு திரும்பி பார்த்தா நாங்க ரெண்டு பேருதான் இருக்கோம் அந்த நண்பர காணோம் எங்கனு பார்த்தா அவரு ரோட்டுக்கு அந்த பக்கம் நிக்கறாரு. என்னனு கேட்டா அய்யோ சாமி என்ன ஆள விடுங்க நான் வரல படகு சின்னதா இருக்கு அது மட்டும் இல்ல அலையெல்லாம் வருது நான் வரலனுட்டாரு. நாங்க எவ்வளவோ சொல்லியும் ஆளு வரவே இல்ல. நாங்க ரெண்டுபேரு மட்டும் கிளம்புனோம்.

கப்பலோ சின்னது நாங்க ரெண்டுபேரு மட்டும்தான் அலை வேற பயங்கரமா அடிக்குது அந்த சமயம். எனக்கு கொஞ்சம் கூட பயம் இல்ல ஆனாலும் நாங்க ரெண்டு பேரும் லைப் ஜாக்கட் போட்டு கிட்டோம் எதுக்கு ரிஸ்க் அப்படினு. சரியா 30 நிமிச பயணம் நாங்க அந்த தீவுக்கு போய் சேர்ந்தாச்சு. அட அட அட அழகுனா அழகு அப்படி ஒரு அழகு கடலோட நிறம் சுத்தமான நீலக்கலர்ல பார்க்கவே கண்ணு படுது அப்படி ஒரு அழகு. இறங்கி உள்ள என்ட்ரன்ஸ் பீஸ் வாங்கிட்டு போனா அங்கதான் ஆமை (பெரிய்ய) ஆமைகள் இருக்குது உள்ள போகும் போது ஒரு கட்டு கீரை குடுக்கறாங்க. அந்த ஆமைகளுக்கு குடுக்கறதுக்கு. அதை அந்த ஆமைகளுக்கு நாங்க ஊட்டி விட்டுக்கிட்டே நிறையபோட்டோ எடுத்தோம்.

ஆமைனா ஒவ்வொன்னும் அம்மாடி ரொம்ப பெரிசு. அப்ப நிறைய ஆமைகளுக்கு வயசு 160 வருசம் ஆயிருக்கு.

உலக தொலைக் காட்சிகளில் முதன் முறையாக 


இதெல்லாம் முடிச்சிட்டு திரும்பலாம்னு நினைக்கும்போது ஒரு ஆமை மட்டும் தனியா இருந்துச்சு பாவம் அதுக்கு யாருமே கீரை தரல சரி பாவம் நாம மட்டுமாவது தரலாம்னு உள்ள இறங்கி போயி குடுத்தேன். அதுக்கு பாவம் பசிபோல கட கடனு கீரைய கடிச்சுகிட்டே வந்துச்சு அப்ப என்ன ஆச்சு கீரை தண்ட கடிக்கறதா நினைச்சு என் மோதிர விரல கடிச்சுடுச்சு நான் அவசரமா விரல இழுக்கவும்  அதோட பல்லுல சிக்கி விரலுல நல்லா 1 இன்ச் அளவுக்கு காயம். ரத்தம் கடகடனு வர ஆரம்பிச்சுடுச்சு. பாவம் ஆமை அது வேணும்னு கடிக்கல அதுக்கு பசி அதான் தண்டுனு நினைச்சு விரல கடிச்சுடுச்சு. உடனே அந்த தோட்ட காரன் கிட்ட கேட்டோம் இதுக்கு என்ன மருந்து போடறதுனு அவன் கூலா இதுக்கெல்லாம் ஒன்னும் மருந்து போட வேண்டாம் போயி கடல் தண்ணில கழுவுங்க போதும்னு சொல்லிட்டான். எனக்கு அழுகையா வருது.
அப்புறம் பக்கத்திலயே ஒரு ஹோட்டல் இருந்துச்சு அங்க போயி கொஞ்ச நேரம் உக்காரலாம்னு உக்காந்து போட்டோ எடுத்துக்கிட்டோம். அப்பவும் மனசே சரியில்ல என்னடா இப்படி ஆயிடுச்சேனு. ஆனா அந்தஹோட்டல் சூப்பரா இருந்துச்சு. பழைய கட்டிடத்த மாத்தாம அப்படியே புதுசு மாதிரி வச்சிருக்காங்க. அங்க பால்கனி மாதிரி ஒரு இடம் பில்டிங்ல இருந்து நீண்டு இருக்கும் அதுல நாம நிக்கற உக்கார அத்தனையும் கடலுக்கு மேல அதாவது அடில கடலுமேல ஸ்லாப் போட்டு அளகா வச்சிருக்காங்க.

 அப்புறம் திரும்ப கடற்கரைக்கு வந்தோம். அங்க கடல்ல நிறையபேரு குளிச்சுட்டு இருந்தாங்க. எனக்கு தண்ணில இறங்கற எண்ணமே இல்ல.  அப்படியே ஓடிபோயி தண்ணில (Snorkling) பாக்கற கண்ணாடி அப்புறம்வாய்வழியா சுவாசிக்கற ஒரு ட்யூப்பு இதுக்கு 100 ரூபாய் வாடகைவேற குடுத்து வாங்கிட்டு வந்திட்டாரு. உணமையில மறக்க முடியாத காட்சிகள் தண்ணிக்கு அடியில இவ்வளவு இருக்கா அம்மாடி. சூப்பருங்க நாம டிஸ்கவரி சேனல்ல பாக்கற மாதிரியே குட்டி குட்டி மீனுங்க கூட்டமா டிசைன் டிசைனா வந்து போகுது அது போக கல்லே செடி மாதிரி டிசைனா கலர் கலரா இருந்துச்சு. உள்ள இருந்து அந்த கல்லு செடி கலர் கலரா எப்படி உருவாகுதுனே தெரியல அதெல்லாம் பார்க்க ரொம்ப அருமையான மறக்க முடியாத காட்சிகள். இதெல்லாம் முடிச்சு வெளிய வரும்போது சரியா ரெண்டு மணிநேரம் கடந்திருக்குது. நேரம் போனதே தெரியல. அப்படியே ஆமை கடியும்தான். இதெல்லாம் முடிச்சுட்டு வெளிய வந்தப்புறம் எங்க வீட்டுக்காரரு கிண்டல் யாரோ தண்ணில இறங்க மாட்டேனு சொன்னாங்க கடைசில பார்த்தா என்ன கரைல நிக்கவெச்சுட்டு நீ இந்நேரம் ஆடறயே நியாயமானு. என்ன பண்ணறதுங்க தண்ணில இறங்கற வரைக்கும் பயம் இறங்கின பிறகு ஒன்னுமே தெரியல தைரியம் வந்திடுச்சுனு சொல்லி சிரிச்சேன் அப்பறம் அவரு கேட்டுதான் எனக்கு ஞயாபகம் வந்திச்சு ஆமை கடி பத்தியே. ஆமைகடி ரத்தம் வரது நின்னுடுச்சு வலியும் இல்ல.

அதுக்குள்ள கரையில இருந்து நண்பர் போன் பண்ணி என்ன பண்ணறீங்கனு கேள்வி நாங்க இப்பதான் கடல்ல இருக்கோம் நீங்க கரைல என்ன பண்ணறீங்க பாவம்னு கேட்டோம் அவரு கூலா நான் இங்க ஒரு நண்பர்கூட சான்சிபார் சிட்டிய சுத்தி பார்த்துகிட்டு இருக்கேன்னாரு. எதுலனு கேட்டா ஸ்கூட்டர் காரு எல்லாத்துலயும்னு சொல்ல சொல்ல கட்டு சரி நாங்க நினைச்சோம் யாரவது கல்லூரி மாணவர்களா இருக்கும்னு. அப்புறம் கிளம்பி கரைக்கு போகலாம்னு கப்பலுக்கு வந்தோம் படகோட்டி எங்கள ஏத்திட்டு கப்பல நகர்த்த ஆரம்பிச்சான். எனக்கு சந்தேகம் இவ்வளவு பழங்கள் வாங்கிட்டு வந்தானே ஒன்னு கூட இன்னும் எங்களுக்கு தரலயேனு. ஏன்னா எனக்கு பசி பயங்கரமா ஆயிடுச்சு தண்ணில ஆடின ஆட்டத்துல. கப்பல் கொஞ்ச தூரம் வந்தப்புறம்தான் அவன் பழங்கள எடுத்து கட் பண்ணி அழகா குடுக்க ஆரம்பிச்சான். அப்புறம் விசாரிச்சதுல அந்த தீவு ஒரு தனியாருக்கு சொந்தமானது அங்க அந்த ஹோட்டல் உணவுகள் மட்டும்தான் சாப்பிடனும் பிற உணவு பொருட்கள் அனுமதி இல்லைனு. பசிக்கு எல்லா பழமும் அமிர்தமா இருந்துச்சு சுத்திலயும் தண்ணி நடுவுல உக்காந்து பழங்கள் சாப்பிடறது அருமையாதான் இருந்துச்சு. பழங்கள் சாப்பிட்டு முடிக்கும்போது

கரை கிட்ட வந்தாச்சு. கரைய போட்டோ எடுத்துகிட்டே வந்தோம்.

கிட்டதட்ட அந்த இடங்கள் வெனீஸ் மாதிரியேதான் இருக்குது. அப்புறம் கரைல இறங்கும்போது தயாரா எங்க நண்பர் இருந்தாரு எப்படி தெரியும் நாங்க இப்ப வருவோம்னு கேட்டா. அவரு அதான் படகோட்டி போன் பண்ணி சொன்னானே அப்படிங்கறாரு. கடற்கரைல இருந்து ஹோட்டலுக்கு கிட்டதட்ட அரை கிலோ மீட்டர் இருக்கும். இனி நடக்கனுமா இல்ல கார் பிடிக்கனுமோனு யோசனை பண்ணிகிட்டு இருக்கும்போதே நண்பர் வாங்க நம்ப கார் இருக்குதுனு ஏத்துனாரு யாருப்பா அந்த நண்பன்னு கேட்டா அதாங்க நம்ம கேப்டன். நம்மள கூட்டிகிட்டுபோக வந்தானே காலைல அவன் தான் இது. நீங்கபோன பிறகு அவன் கூடதான் ஊரு சுத்திகிட்டு இருக்கேன். இதும் அவன் காருதான் ஏறுங்க போகலாம்னு ஏத்தி ஹோட்டலுக்கு கூட்டி கிட்டு போனாரு. போகற வழிலயே இனி மதியம் என்ன பண்ணறது பக்கத்துல பாதி நாள் சுத்தற மாதிரி என்ன இடம் இருக்குனு அவனையே கேட்டோம். அதுக்கு அந்த ஆளு ஸ்பைஷ் டூர் போகலாம் அரை நாள்ள முடிஞ்சிடும்னு சொன்னான். சரி நாங்க குளிச்சு கிளம்பி வரோம் நீயே கூட்டிகிட்டு போனு சொல்லிட்டு நாங்கபோயி 20 நிமிசத்துல தயாராகி வந்தாச்சு.


Wednesday, February 06, 2013

ஜான்சிபார் - 2

இரண்டாம் நாள்

அடுத்த நாள் காலைல தூங்கி எழுந்து பார்த்தா அவரு எனக்கு முன்னாடி ரெடியா இருந்தாரு எப்படினு கேட்டா எல்லாம் சிக்கன் புண்ணியம் 3 மணிக்கே எழுந்தாச்சுனு சொன்னாரு. அங்கன விடுதிகாரங்களே இலவசமா காலை உணவு குடுத்தாங்க சாப்பிட்டுட்டு தயாரானவுடனே அவருடைய மாணவி அந்த ஊருக்கார பொண்ணு வந்து நின்னாங்க. அவங்க கிட்ட இன்னிக்கு எங்க போலாம்னு விசாரிச்​சோம் பக்கத்துல இருக்கற கோட்டைய பார்க்கலாம்னு சொல்லுச்சு ஆனா எங்களுக்கு உள்ளூரு வேண்டாம் வெளியூருல சுத்தி பாக்கலாம்னு சொன்னோம். ஏன்னா அந்த பொண்ணுக்கு ஸ்வாகிலி தெரியும் வழி கேட்கறது ரொம்ப எளிது. நாங்க ஊருல இருந்து கிளம்பறதுக்கு முன்னாடி அலுவலகத்துல வேலை செய்யற ஒரு பாட்டி சொன்னாங்க சான்சிபார்ல ஒரு குகை இருக்கும் கண்டிப்பா போயிட்டு வாங்கனு. சரி இன்னிக்கு அந்த இடத்துக்கு போலாம்னு முடிவு பண்ணிட்டு வழிகேட்க ஆரம்பிச்சோம். சரியா காலை 11 மணிக்கு அந்த ஊருக்கு போற ​பேருந்து வந்துச்சு. இதுல முக்கியமான விசயம் இந்த தான்சானியா முழுக்கவே பஸ்னா உடனே நம்ம ஊரு பஸ் மாதிரினு நினைக்காதீங்க, நம்ம ஊரு ஆம்னி வேன் தான் இந்த ஊருல பஸ். எப்படியோ ​பேருந்து பிடிச்சு 1 மணிநேரம் பயணம் செஞ்சு ஒரு கிராமத்துல இறக்கி விட்டுட்டு போயிடுச்சு. அங்க ​பெயர் பல​கை ஒன்னு குகைக்கு போக இங்கயிருந்து 1 கி மீட்டர் நடக்கனும்னு போட்டிருந்துச்சு சரி 1 கி மீ தான நடக்கலாம்னு நடக்கறோம் நடக்கறோம் நடந்துகிட்டே இருக்கோம் இடம் மட்டும் வரல இதுல அந்த ஊரு குழந்தைங்க ஒரு 10 பேரு எங்க பின்னாடியே வேடிக்கை பார்த்துகிட்டு வந்தாங்க. எப்படியோ காடு மேடு ஏறி இறங்கி அந்த இடத்துக்கு போய் சேர்ந்தோம். அங்க பார்த்தா ஒரு கிணறு மட்டும் இருந்துச்சு அதுக்கு 1 டாலர் கட்டணம் வேற. திட்டிக்கிட்டே வாங்கிட்டு பக்கத்துல போனோம். அப்பகூடவே ஒரு பையன் வழிகாட்டி பணி ​செய்ய டார்ச் எல்லாம் எடுத்துகிட்டு வந்தான். அத பார்த்து நாங்க சிரிச்சோம் சின்ன கிணத்த சுத்தி பார்க்க இவ்ளோ ஆர்பாட்டமானு.

அப்புறம் அசட்​​டையா கிணத்து படில இறங்க ஆரம்பிச்சோம் கொஞ்ச தூரம் போன பிறகு அப்படியே மலைச்சு போயி நின்னுட்டோம். அம்மாடி எவ்ளோ பெரிய குகை அசந்து போயிட்டோம். மேல பாக்க வெறும் கிணறு மாதிரி சின்னதா இருக்கு ஆனா உள்ளே பெரிய குகை. சரி இந்த பையன கேட்போம்னு சொல்லுப்பா தம்பி இந்த இடம் என்ன ஏதுனு கேட்க ஆரம்பிச்சோம். அவன் சொன்ன கதை “இந்த இடத்துக்குபேரு மங்காபானி (Mangapwani) அதாவது மங்கானா அரேபியர்கள்னு அர்த்தம் பானினா தண்ணி அதாவது இந்த இடத்துக்கு அரேபியர்களின் கடற்கரைனு பேரு. இங்க இந்த குகை சான்சிபார் புரட்சி 1960ல நடந்துச்சு அதுக்கு அப்புறமா கட்ட பட்டு இருக்கலாம். புரட்சிக்கு பிறகு அடிமை வியாபாரம் தடை செய்யப்பட்டது. அந்த டைம்ல அடிமைகள மறைச்சு வெச்சு வியாபாரம் பண்ண இந்த குகைகளை உபயோகம் பண்ணி இருக்காங்க. வெளில இருந்து பார்த்தா சாதாரண விவசாய நிலம் அதுல ஒரு சின்ன கிணறு அவ்ளோதான் தெரியும் ஆனா உள்ள ஆயிரக்கணக்கான அடிமைகளை மறைச்சு வெச்சுக்கலாம். அது மட்டும் இல்ல இந்த குகைல இருந்து 3 கிமீ தூரத்துக்கு குகை போகுது அது கடற்கரைல போயி முடியும். இங்க இருந்து அடிமைய நிலத்துக்கே கூட்டி வராம அப்படியே குகை வழியா கடற்கரைக்கு கொண்டு போயி கப்பல்ல ஏத்தி வெளி நாட்டுக்கு அனுப்பிடலாம். இப்ப இங்க ரெண்டு வழி இருக்கு ஒன்னு நல்ல வழி ஆனா 3 கி மீ தூரம் மற்றது 1 கி மீ தூரம் ஆனா வழி ரொம்ப மோசமா இருக்கும். நீங்க எந்த வழிய தேர்ந்து எடுத்தாலும் அது வழியா போலாம்னு” சொல்லி நிறுத்துனான்.
அது மட்டும் இல்ல இந்த இடத்தை கண்டு பிடிச்சது ஒரு கதை  ஒரு தடவை ஆடுமேய்க்கும் போது ஆடு தவறி கிணத்துல விழுந்திருக்கு ஆனா ஆடு சாகவும் இல்லாம கத்திக்கிட்டே இருந்திருக்கு அதனால கயிறு கட்டிகிட்டு இறங்கி பார்த்திருக்காங்க அப்பதான் இவ்ளோ பெரிய இடம் இருக்கறதே தெரிஞ்சிருக்கு.”
இந்த கதையயும் இடத்தையும் பார்த்தே மலைச்சு நின்னாச்சு சரிகொஞ்ச தூரம் போயி பார்க்கலாம் அப்புறம் முடிவு பண்ணலாம்னு சொல்லிட்டு நடக்க ஆரம்பிச்சோம். கொஞ்சம் போனவுடனே ஒரு சின்ன குளம் மாதிரி இருக்கு அதுல தண்ணி இருந்துச்சு அந்தபையன் இதுரொம்ப சுத்தமான தண்ணி எந்த அழுக்கும் கிடையாது பக்கத்து கிராம மக்கள் இந்த தண்ணிய  மருந்து மாதிரி உபயோகம் பண்ணறாங்க. இதை குடிச்சா நோய் நீங்கும்னு நம்பறாங்கனு சொன்னான். சரினு நாங்களும் ஆளுக்கு கொஞ்சம் குடிச்சு வெச்சுகிடடோம்ல :).

அப்படியே உள்ள போக போக வவ்வால் நிறைய கூரைல இருந்துச்சு. பத்தாததுக்கு வேர்வை பயங்கரமா வர ஆரம்பிச்சுது. இதெல்லாம் டிஸ்கவரி சேனல்ல பார்க்கதான் நல்லா இருக்கும் என்னால முடியாதுனு சொல்லிட்டு நான் வரல சாமி ஆள விடுங்கனு சொல்லி திரும்புனேன் அந்த பொண்ணும் என் கூட வந்திடுச்சு ரெண்டு பேரும் மேல படிகிட்ட வந்த பிறகு தான் உயிரே வந்திச்சு. எங்க வீட்டுல அவரு  இன்னும் கொஞ்ச தூரம் போறேனு உள்ள போனாரு  ஒரு கால் மணிநேரம் கழிச்சு அவங்களும் திரும்ப வந்தாங்க. என்ன பார்த்திங்க முழுசா போலையானு கேட்டோம் அப்ப சொல்லறாங்க உள்ள போக போக வவ்வால் அதிகமா இருக்கு அது மட்டும் இல்ல மூச்சு திணறலும் ஆரம்பிச்சிடுச்சு அதான் வந்திட்டோம்னாங்க. சந்தோசம் திரும்ப போலாம்னு சொன்னப்ப அந்த கைட் பையன் இன்னொரு வழி இருக்கே அதுலவேணா போயி பார்க்கலாம்னு சொன்னான். அங்க நானும் அந்த பொண்ணும் மட்டும் போனோம். அட அந்த வழி கொடுமையிலும் கொடுமையா இருந்துச்சு ஒரே கல்லு கல்லா ஆண்டவா எப்டிதான் அங்க அடிமை இருந்தாங்களோ ரொம்ப பாவம் அவங்க. ஒரு 20 அடிக்கு மேல நடக்க முடியல போட்டோ மட்டும் எடுத்துகிட்டு திரும்ப வந்திட்டோம். மேல நிலத்துக்கு வந்த பிறகுதான் நிம்மதியாச்சு. நிஜமா வாழ்க்கைல மறக்க முடியாத அனுபவம் அது.


வெளிய வந்து மறத்துக்கு அடியில உக்கார்ந்து இருக்றோம் நம்ம கூட வந்த பசங்க எல்லாம் மரம் ஏறி பழம் புடுங்கி குடுத்தாங்க அட என்ன பழமா இருக்கும்னு பார்த்த நம்ம எழந்தைப்பழம்தான். ஒரே சநதோசம் ஆயிடுச்சு அவங்க நிறைய புடுங்கி புடுங்கி குடுத்தாங்க. அப்புறம் ஒரு பையனோட மிதிவண்டி வாங்கி கொஞ்ச தூரம் ஒட்டினோம் அவங்கள ஒளிபடம் எடுத்து காட்டினவுடனே ரொம்ப சந்தோசம் ஆயிடுச்சு அவங்களுக்கு.

அடுத்த இடத்துக்கு போகலாம்னா அதும் இன்னும் 2 கி.மீ தள்ளி இருக்குனாங்க. இப்பவே சலிச்சு போச்சு பக்கத்துல ஒரு விவசாயிகிட்ட மாட்டு வண்டில கொண்டு விடுங்கனு கேட்டோம் ஆனா அவரு மாட்​டேன் சொல்லிட்டாரு அதனால நடராஜா சர்வீஸ்தான். காட்டு வழில ரெண்டு பக்கமும் விவசாய நிலம். ஆனா வெயில் கொழுத்தி எடுத்திடுச்சு :(. வேர்க்க விறுவிறுக்க அங்கபோயிசேர்நதோம். அங்க ஒன்னும்பெரிசா இல்ல நிலத்துக்கு அடில ஒரு ரெண்டு அ​றை மாதிரி கட்டி இருக்காங்க அடிமைகளை கப்பல் ஏத்தறதுக்கு முன்னாடி அடைச்சுவெக்கிற இடம் அது. கீழ இறங்கி பார்த்திட்டு இருக்கும்போது ஒரு பொந்துல இருந்து பாம்பு தலைய நீட்டிகிட்டு இருந்திச்சு நான் பார்த்து அலறிமேல வந்திட்டேன். ஆனா பின்னாடி வந்தவங்க அது பாம்பு இல்லவேற ஏதோ விலங்குனு சொன்னாங்க இருந்தாலும் பயமாதான் இருந்துச்சு. அந்த இடத்துக்குபேரு ஸ்லேவ் சாம்பர்(Slave Chamber). அங்க இருந்து எட்டி பார்த்தா கடல் தெரியுது. அங்கபோயி நல்லா கடல்ல நின்னு நிறைய போட்டோ எடுத்தோம். அழகான ரம்மியமான இடம் இயற்கை இந்த நாட்டுக்கு ரொம்ப அழக குடுத்திடுச்சுப்பா. எங்க பார்த்தாலும் அழகா இருக்கு. ஆள் நடமாட்டமே இல்லாத கடற்கரை அவ்ளோ அழகா தனியா இருக்கு. கூட வந்தபையன் இந்தி சினிமா ரொம்ப பார்த்து பார்த்து மாதுரி தீட்சித், சல்மான்கான் எல்லாரையும் கேட்டதா சொல்லி அனுப்புனான். அப்பதான் தெரிஞ்சுது இந்தி படம் எங்க எல்லாம் பிரபலமாகி ஆகியிருக்குனு.


எப்படியோ பேசி முடிச்சு திரும்ப கிளம்பனும்னு சொன்னப்புறம்தான் தெரிஞ்சுது எல்லாருக்கும் கால்வலி பின்னி எடுக்குது இனிமேலும் 2 கி மீ நடக்கற காரியமா தெரியல அதனால பக்கத்துல ஏதாவது கார் கிடைக்குமானு கேட்டோம் அந்த ஆளு இன்னும் உள்ள அரை கி மீ நடந்தா ஒரு உணவு விடுதி இருக்கும் அங்க டாக்சி கிடைக்கும்னு சொல்லிட்டு கூடவே நடந்து வந்தான். உள்ள காட்டுக்குள்ள ஒரு அரு​மையான விடுதி அது கடலுக்கு ரொம்ப பக்கத்துல அழகா இருக்கு அங்க எல்லாரும் வெள்ளை காரங்கதான் இருக்காங்க எப்படியோ ஒரு டாக்சிய கெஞ்சி கேட்டு முக்கியசா​லை வரைக்கும் கொண்டு போய் விட சொல்லி கொண்டு வந்து விட்டான்.
இப்ப அடுத்தது மதிய சாப்பாடுக்கு என்ன பண்றதுனு பார்த்தோம் எல்லாருக்கும் பசி ரொம்ப அதிகம் நடந்து நடந்து. அங்க முக்கியசா​லை  சொல்லற எடத்துலயே ரெண்டு கடைதான் இருக்குது. அதுல ஒரு கடைல ஒன்னுமே இல்ல ஏன்னா எல்லாம் தீர்ந்திடுச்சு 3 மணிக்கே. இங்கெல்லாம் கடைனா ஏதோ பெரிசா நம்ம ஊரு கடைங்க மாதிரினு நீனைச்சுகாதீங்க, தென்ன ஓலை போட்டு ஒரு குடிசை மாதிரி இருக்கும் அதுல நாலு பெரம்பு சேர்போட்டு பலகைல டேபிள் இருக்கும் அவ்ளோதான். எப்படியோ ஒரு கடைல ஆளுங்க இருந்தாங்க அங்க போயி என்ன சாப்பிட இருக்குனு கேட்டோம்.
அவன் சிப்ஸ் மட்டும்தான் இருக்குனாங்க. எனக்கு அது​போதும்னு சொல்லிட்டேன் ஆனா எங்க வீட்டு காரரும் அவரு நண்பரும் சிப்ஸ் என்னத்துக்கு ஆகும் சாப்பாடு இருந்தாதான் சாப்பிட்ட மாதிரி இருக்கும்னு சொல்லி புலம்பிகிட்டே சிப்ஸ் ஆர்டர் பண்ணுனாங்க. நாங்க ஆர்டர் பண்ணுனதுக்கு அப்புறம்தான் அவன் அடுப்பு பத்தவெச்சு தயாரிக்க ஆரம்பிச்சான். எல்லாம் கொடுமை. இந்த சிப்ஸ் மயாயி அப்படீங்கறது என்னனா.உருளை கிழங்க நீள நீளமாவெட்டி எண்ணைல (as like our finger chips) பொரிச்சு எடுத்துக்கனும் அப்புறம் முட்டைய உடைச்சு நல்லா   அது கூட இந்த சிப்ஸ் போட்டு மிக்ஸ் பண்ணி ஆம்லெட் மாதிரி ஊத்தி எடுத்து தருவாங்க. இதுக்கு பேருதான் சிப்ஸ் மயாயி. மயாயினா ஸ்வாகிலில முட்டைனு அர்த்தம். இதுக்கு தொட்டுக்க பீலி பீலினு ஒன்னு வெச்சிருப்பாங்க அது என்னனா வெறும் பச்ச மிளகாய அரைச்சு கொஞ்சூண்டு தக்காளி சேர்த்து சாஸ் மாதிரி வெச்சிருப்பாங்க. இந்த கொடுமைதான் தான்சானியா முழுக்கவே நானும் சாப்பிட்டு பழகிட்டேன் வேற வழி.ரொம்ப நேரம் கழிச்சு சிப்ஸ்கொண்டு வந்தான் பரவாயில்லை நல்லா செஞ்சிருந்தான் சிப்ஸ் மயாயி கூட நிறைய வெஜிடபிள் போட்டு சாஸ் ஊத்தி குடுத்தான். நாங்க சாப்பிட ஆரம்பிச்சவுடனே ஒரே ஒரு ப்ளேட் சாப்பாடும் மீன் ஒன்னும் கொண்டு வந்து குடுத்தான். எப்படி இதுனு கேட்டேன். கூட வந்த நண்பர் சொன்னாரு வெயிட் பண்ணிகிட்டு இருக்கும் போது வெளிய போயி பார்த்தேன் அங்க வேலை செய்யற வங்களுக்கு சாப்பாடு செஞ்சுட்டு இருந்தாங்க அவங்க கிட்ட கெஞ்சி கேட்டேன் அதான் ஒரு கப் ஸ்பெஷலா எனக்கு மட்டும் குடுத்தாங்கனாரு. அவருபேசிட்டு திரும்பி பார்த்தா தட்டுல இருந்த மீன கானோம் எங்கனு பார்த்தா கோழி கொத்திட்டுபோயி சாப்பிட்டுட்டு இருக்கு. சரினு இருக்கற சாப்பாட்ட பீலி பீலி ஊத்தி எப்படியோ சாப்பிட்டாங்க. இங்க சாப்பாடுனு கேட்டா வெறும் சாப்பாடு மட்டும்தான் தருவாங்க நம்ம ஊரு மாதிரி குழம்பு ரசம்  ஏதும் கிடையாது. ஆனா என்ன இவங்க அரிசி சாதம் செய்யும் போது கூடவே கொஞ்சம் எண்ணை விட்டு உப்பு போட்டு அளவான தண்ணி வெச்சு வடிக்காம வேக வெச்சுடுவாங்க அதனால வெறும்  சாப்பாடே கொஞ்சம் ருசியாதான் இருக்கும். எப்படியோ சாப்பிட்டு முடிச்சு கிளம்பலாம்னு பார்க்றோம் அப்பதான் ஒரு விசயம் ஞாபகம் வந்திச்சு நாங்க வந்த இந்த ஒரு மணி நேரத்துல ஒரு பஸ் கார் கூட எங்கள தாண்டிபோகவே இல்ல. ஆகா நல்லா மாட்டி கிட்டோம்னு நினைச்சு புலம்பி கிட்டே நின்னோம். அப்ப ஒரு ​பேருந்து வந்திச்சு கடைகாரர் இது நகரத்திற்க்கு தான் போகும் நீங்களும் போலாம்னு. நாங்க ஓடிபோயி பார்த்தா என்ன கொடுமை சாமி இது. நம்ம ஊரு மினிடெம்போல பின்னாடிரெண்டு பலகை அடிச்சு உக்காற வெச்சிருக்காங்க அதுக்குமேல தார் பாயி  கட்டி இருக்காங்க ஏறி நிமிர்ந்து நடக்க முடியாது குமுஞ்சு கிட்டே போயி உக்காற வேண்டியதுதான் இதுல அல்ரெடி பஸ் புல்லு. நடுவுல கீழ குத்த வெச்சு உக்கார்ந்திட்டு வரதுனா ஏறுங்கனு சொல்லறாங்க. எங்களுக்கு வேற வழி இல்ல இதையும் விட்டா அடுத்த வண்டி எபபோ வரும்னு தெரியல கார் மாதிரி வண்டிகளும் கிடையாது சரி ஏறுவோம்னு எப்படியோ ஏறி வந்து சேர்ந்தோம் அந்த ஊருகாரங்க எங்கள பார்த்து சிரிக்க நாங்க அவங்கள பார்த்து சிரிக்க எப்படியோ சிட்டிக்கு வந்து சேர்ந்தோம்.

சிட்டிகிட்ட வரும் போது அந்த பொண்ணு கிட்ட இந்நேரத்துக்கு அ​றைக்கு போயி என்ன பண்ணறது வேற ஏதாவது இடம் இருந்தா சொல்லுனு கேட்டோம். உடனே அந்த பொண்ணு வேற ஒரு இடம் இருக்குனு ஒரு பழைய கோட்டைக்கு கூட்டி கிட்டு போச்சு.

அதுபேரு மருகுபி பேலஸ் (Maruhubi Palace) அதுவும் பழைய சுல்தான் யாரோ வாழ்ந்த இடம் ஆனா அங்க ஒரு பெரிய குளம் இருந்துச்சு நல்ல தண்ணி அதனால நல்லா மூஞ்சி கழுவி குளிச்சு புத்துணர்சி ஆகிட்டோம். அப்புறம் கோட்டைய சுத்தி பார்த்துட்டு பின்னாடி வந்தா கடல். அங்க முழுசும் கப்பல் செய்யற இடம். நிறைய பெரிய பெரிய கப்பலுங்க கிடக்குது. அங்கயெல்லாம் நல்லா போட்டோ எடுத்துகிட்டு கடல் ஓரமா சுத்தி வந்தோம் அங்க ஒரு ஆள் என்னவோ துணி துவைக்கற மாதிரி கல்லுல அடி அடினு அடிச்சுகிட்டு இருந்தான் என்னனு பக்கத்துலபோயி பார்த்தா அது ஆக்டோபஸ் மீன். அட ஆண்டவா அதை என்ன பண்ணறீங்கனு கேட்டா ஆக்டோபஸ் சமைக்கறதுக்கு முன்னாடி இப்படி அடிச்சு கழுவுனா சமைக்கறது ஈசினு சொன்னாங்க. ஆப்டோபஸ் அடிச்சு அடிச்சு அது நுரை மாதிரி வருது அப்புறம் கழுவி சமைக்கறாங்க. இன்னிக்குதான் ஆக்டோபஸ் முழுசா பாத்திருக்கேன். ஆனா பாவம் அது.


இதுல நாங்க அங்க இருக்கும் போதே ஒரு பையன் போன் மேல போன் அவங்க வீட்டுக்கு வந்தே ஆகனும்னு. நாங்க இங்க ஊரு சுத்திகிட்டு இருக்கோம் அங்க இருக்கோம்னுசொல்லி கிட்டே வந்தோம். எல்லாம் ஒரே பாசக்கார பசங்களா இருக்காங்க என்ன பண்ணறது.

நகரத்தி​லே வந்து இறங்கும் போதே அந்த பையன் அங்க காத்துகிட்டு  இருந்தான். அவன் முதல் நாளு எங்கள அலைய விட்ட அதேபையன். மனசுக்குள்ள இவன் வீட்டுக்கு போயி என்னத்த பண்ணறது. அதே பீலி பீலி சிப்ஸ்தான தரபோறான் இதுக்கு இங்க இருந்து அவ்ளோ தூரம் போகனுமானு யோசிச்சு கிட்டே இருந்தோம் இருந்தாலும் அவன் இவ்ளோ தூரம் கூப்பிடறானே போய்தான் பார்ப்போம்னு கிளம்பி அவன் கூட போனோம் அந்த பொண்ணு அவ வீட்டுக்கு போயிட்டா. அவன்கூடபோனோம் ஒரு அரை மணிநேர பயணம் அப்பவும் அவங்க வீட்டுக்கு பக்கத்துல பஸ்போகாதுனு டாக்சி எடுத்தான். டாக்சில ஏறி வண்டி எடுக்கும் போதே ரெண்டு பேரு தள்ளி விட்டுதான் வண்டி ஸ்டார்ட் ஆச்சு. நேரா பெட்ரோல் பங்க் போயி பெட்ரோல்போட நிக்கறோம் வரிசையா ஸ்கூட்டரா வருது. அந்த சான்சிபார் டவுன் முழுக்கவே வெஸ்பா ஸ்கூட்டர் தான் ஓட்டறாங்க. அதை பார்த்து சந்தோசம் ஆயிடுச்சு. என்ன இருந்தாலும் நம்ம ஊரு வண்டியில்ல அதான். அப்புறம் அவங்க வீட்டுக்கு போயி சேர்ந்தோம் வெளில ஒரு 5, 6 குழந்தைங்க விளையாடிட்டு இருந்துச்சு நான் நினைச்சேன் அதெல்லாம் பக்கத்து வீட்டு குழந்தைங்கனு உள்ளபோயி பார் த்தா வீடு சூப்பரா இருக்கு.

அவங்க அண்ணன் வந்தாரு சான்சிபார் ஜெயில்ல ஆபீஸர்னு அறிமுகம் பண்ணிகிட்டாரு. அப்புறம் அவங்க அம்மா அக்கா எல்லாரும் வந்து அறிமுகம் பண்ணிகிட்டாங்க. அவரு இந்தியர்கள் அவங்க வீட்டுக்கு விருந்துக்கு வந்ததுக்கு சந்தோசம்னு சொன்னாரு.  கடைசியா அவரு சம்சாரம் வந்து அறிமுகம் பண்ணிகிட்டு குழந்தைகள அறிமுகம் செஞ்சுது. வெளிய விளையாடிட்டு இருந்த 5 ம் அவருடைய சொந்த குழந்தைங்க தானாம். அட ஆண்டவா எப்படிதான் சமாளிக்கறாங்ளோ இவ்ளோ குழந்தைங்கள வெச்சு. அப்புறம் காபி சாப்படறீங்களானு கேட்டாங்க. உடனே நாங்க சரினு சொன்னோம்ல ஏன்னா மதியம் கொஞ்சம் சாப்பிட்டது அதுக்கு பிறகு ஒன்னுமே சாப்பிடலை. அவங்க சம்சாரம் உள்ள போனது ரொம்ப நேரம் வரவே இல்ல. நாங்க நினைச்சோம் உள்ள போயி வெறும் காபிக்கு இவ்ளோ நேரமானு. கடைசில பார்த்தா தட்டு தட்டா எடுத்துட்டு வந்து வெச்சாங்க. என்ன என்ன ஐட்டம் தெரியுமா? பஜ்ஜி,போண்டா, கட்லெட்,ஸ்வீட் பிஸ்கட்ஸ் அப்புறம் தேங்காய் சட்னி. இதெல்லாம் பார்த்து ஆனந்த கண்ணீரே வந்திடுச்சு. ஏன்னா இதெல்லாம் இந்தியால பார்த்தது இப்பதான் 4 மாசம் கழிச்சு பாக்கறோம். ஆகா விடுவமா புகுந்து விலாசிட்டோம்ல. அவங்க கிட்ட அப்புறம் கேட்டோம் இதெல்லாம் எப்படி உங்களுக்கு செய்ய தெரியும்னு கேட்டோம் அதுக்கு அவங்க சொன்னாங்க இந்தியர்கள் (குஜராத்துகாரங்கதான்) இங்க இருந்தாங்க அவங்க கத்துகுடுத்ததுதான் இதெல்லாம்னு சொன்னாங்க. ஆகா நீங்க உங்க குடும்பம் எல்லாம் நல்லா இருக்கனும் சாமி ஏன்னா இந்திய சாப்பாட கண்ணுல காட்டுனதுக்கு ரொம்ப நன்றினு சொல்லிட்டு அவங்க கூட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டு கிளம்புனோம்.

கிளம்பி வரும்போது மறுபடியும் வண்டி தள்ள வேண்டியதா போச்சு எங்க வீட்டுகாரரு நான் எந்த நாட்டுக்கு போனாலும் வண்டி தள்ளற வேலை மட்டும் விட்டு போகாது போல இருக்குனு கிண்டல் பண்ணிகிட்டே வந்து சேர்ந்தோம். எங்க போனாலும் இந்த குடும்பம்ங்கற அமைப்பும் உபசரிப்பும் ஒரு சந்தோசத்தை தருதுனு நினைச்சு கிட்டே தூங்குனோம்.

இன்னமும் வரும்.. :)  :)

Monday, February 04, 2013

ஜான்சிபார் - 1

வணக்கம்,
இந்த கட்டுரை  நானும் எனது கணவரும் (2008) சென்று வந்த சுற்றுலா பற்றிய குறிப்பு மட்டுமே வேற ஒன்னும் உருப்படியா இல்லீங்க. நாங்களிருவரும் தான்சானியா எனும் ஆப்ரிக்கா நாட்டை சேர்ந்த ஜான்சிபார் எனும் தீவிற்கு போய் வந்தோம்.

முதன் முதல்ல இந்த ஊருக்கு போறதால கூகுள்ள தேடி நிறைய விசயங்கள தெரிஞ்சு கிடடோம். முக்கியமா சொல்ல வேண்டியது என்னனா எங்க வீ ட்டுக்காரரு வேலை செய்த கல்லூரில நிறைய பசங்க அந்த ஊருல இருந்து வந்து படிக்கராங்க.

இவங்க கல்லூரி விடுமுறைங்கறதால நாலு நாள் சேர்ந்தா மாதிரி விடுமுறை கிடைச்சுது. தான்சானியாவில இருந்து இந்த ஜான்சிபார்  போகனும்னா ரெண்டு வழிதான் இருக்கு ஒன்னு விமானம், ரெண்டாவது கப்பல். விமானத்துல போனா கால் மணி நேரத்துல போயிடலாம் கப்பல்னா 2 மணிநேரம் ஆகும். எங்க வீட்டு காரரு விமானம்னு சொல்ல நான் கப்பல்னு சொல்ல கடைசில கப்பல்தான் ஜெயிச்சுது. கப்பல்ல போனாதான் கடல நல்லா பாக்கலாம்னு சொல்லி சம்மதிக்க  வெச்சேன்



     நாங்க கிளம்புனது வியாழன் காலை 7 மணி கப்பல். கப்பல் பேரு சீ எக்ஸ்ப்ரஸ் (Sea Express) இதுல முக்கியமான விசயம் எங்க ரெண்டுபேரு கூட மூணாவதா ஒரு நண்பரும் வந்திருந்தாரு. அவருக்கு தண்ணிய பார்த்தலே பயம் தெனாலி மாதிரி. சரியா 7.30க்கு செக் இன் எல்லாம் முடிஞ்சு வண்டி கிளம்புச்சு. அப்ப பக்கத்தில பார்த்தா யாரோ முணங்கற சத்தம் திரும்பி பார்த்தா அந்த நண்பர் சாமி கும்பிட்டுட்டு இருக்காரு கப்பல் கவுந்திடகூடாதுனு. அப்பறம் நாங்களும் வீட்டுக்கு எல்லாம் போன் பண்ணி பேசிட்டு உக்கார்ந்தாச்சு. அப்புறம் எங்க வீட்டுகாரரு சொன்னாரு வெளிய நின்னு பார்த்தாதான் கடல் நல்லா தெரியும்னு. வர மாடடேனு சொன்ன நண்பரையும் கூட்டிகிட்டு வெளில வந்து  அலைகள் பிண்ணனியில நிறைய புகைப்படங்கள் எடுத்தோம். அங்கவெளியதான் பாதி பேர் இருந்தாங்க. வயசானவங்க முதல் குழநதைங்க வரைக்கும். ஆனாலும் நாங்க உள்ள வந்து உக்கார்த்தாச்சு கொஞ்ச நேரங்களிச்சு பார்த்தா பக்கத்து சீட் குழந்தை வாந்தி எடுத்துச்சு அதை பார்த்து எங்களுக்கும் குமட்ட எப்படியோ கரை வந்து சேர்ந்தோம் 9 மணிக்கு. ஜான்சிபார் வந்த பிறகு தான் தெரிஞ்சுது எங்கள கூப்பிட வரேனு சொன்ன பையன் வரவே இல்ல போனும் பண்ணல. அப்புறம் என்ன வழக்கம்போல ஒரு சின்ன டீக்கடைல போயி இனிப்பா ஒரு ஆப்பம் டீ அப்புறம் சப்பாத்தி சாப்பிட்டுட்டு வெயிட் பண்னுனோம் அப்பதான் அந்த பையன் போன் பண்ணி அவன் அலுவலகத்தில வேலையா இருக்கறதாவும் நீங்களே கார் பிடிச்சு வந்து சேருங்கனு சொன்னான். அவனை கண்டபடி மனசுக்குள்ளயே திட்டிக்கிட்டு கார் எடுத்திட்டு அலுவலகம் போய் சேர்நதோம் பெரிய அலுவலகம்தான் TTCL (Tanzania Tele Communicztion Limited) அப்புறம் கொஞ்ச நேரம் அங்க பேசிட்டு அவனை கூட்டிக்கிட்டே பழைய  டீக்கடைக்கிட்ட வந்தோம்  அங்கதான் அவன் எங்களுக்கு பார்த்து வெச்சிருந்த ஹோட்டல் இருந்தது அங்க போயி கொண்டுபோன சாமான் எல்லாம் வெச்சிட்டு எதிர்தாப்புல இருந்த அரபு பிரியாணி கடைலபோயி பிரியாணி ஆர்டர் பண்ணுனோம். ரொம்பநேரம் கழிச்சு வந்தது பிரியாணி, என்னானு பார்த்தா  சாப்பாட்டுல கொஞ்சம் மசாலா சேர்த்து செஞ்சுட்டு அது கூட ஒரு கரண்டி சிக்கன் கிரேவி அல்லது மட்டன் கிரேவிவெச்சு தந்தான் கொடுமை. அதுக்கு பிறகு கிழம்பி சும்மா இன்னிக்கு பக்கத்தில இருக்கற இடத்தை மட்டும் பாருங்கனு ஒரு அரபு சுல்தான் கோட்டைகிட்ட இரக்கி விட்டுட்டு போயிட்டான்.

அந்த இடத்துக்குபேரு (Mtoni marine) முட்டோனி மரைன் அங்க ஒரு பழையகோட்டை இருக்கு அதுலதான் சையது பின் சுல்தான் அல்புசையது வாழ்ந்திருக்காரு. நிஜமா ரொம்ப சொகுசாத்தான் இருந்திருக்காங்க. அங்க என்ன அதிசயம்னா அந்தகோட்டைக்கு கழிவு வெளியேற கடல்ல இருந்து சின்ன கால்வாய்வெட்டி அதுகோட்டை முழுக்க சுத்தி சுத்தி வருது. கோட்டை கதவு  வரைக்கும் கடல் தண்ணி வர மாதிரி கட்டி இருக்காங்க.

அதுல ராணி குளிக்க மசாஜ் ரூம், ஸ்டீம் பாத் எடுக்க ஒரு குகை மாதிரி கட்டி இருக்காங்க. அது மட்டும் இல்ல இங்க முன் மண்டபத்தில ஒருபெரிய ஹால் எதுக்குன்னா அங்கதான் அடிமைகள அடைச்சு வெச்சிருந்து தினம் பக்கத்து தோட்டத்துல வேலை செய்ய கூட்டிட்டு போவாங்களாம். பாவம் அவங்க சரியான சுகாதாரம் இல்லாத இடத்தில இருந்திருக்காங்க. கோட்டைய சுத்திட்டு வெளிய வந்தா கடல் முன்னாடியே இருக்கு. அங்க தான் ஒரு மணிநேரம் நல்லா காத்து வாங்கிட்டு வநதோம். ஆனா தண்ணி ரொம்ப உள்ள இருந்துச்சு சாயந்திரம்தான் தண்ணி கரை வரும்னு சொன்னாங்க. அந்த கோட்டை பக்கத்துயே முட்டோனி மரைன் ஹோட்டல் இருக்கு அது பீச் ரிசார்ட் பூராம் வெள்ளக்காரங்க சன் பாத்து எடுக்கறாங்க. அங்க போயி ஒரு கைக்கு மருதாணி வைக்க 50 டாலர் பணம்னு சொன்னாங்க சரி சரி நாங்க 5 ரூபாய்க்கு எங்க ஊர்லயே வெச்சுக்கறோம்னு வந்திடடோம்ல. சாயங்காலம் கிளம்பி திரும்ப சிட்டிக்குள்ள வந்தோம். அங்க இந்து கோவில் இருக்கறதா சொன்னாங்க. சரினுதேடி பிடிச்சு போனா நம்ம குஜராத்தி மக்கள் எல்லாம் பய பக்தியா பஜனை பாடிட்டு இருந்தாங்க. அந்த கோவில் பூசாரிகிட்டபேசினா அவரு தமிழ் அதும் கோயமுத்தூர் RS புரமாம் அப்பறம் விடுவமா நல்லா 1 மணி நேரம் பேசிட்டு பிரசாதம் வாங்கிட்டுதான் திரும்ப வந்தோம். அவரு சொன்ன தகவல்படி 1960 க்கு முன்னாடி ஜான்சிபார் முழுக்க அராபியர்களும் இந்தியர்களும்தான் இருந்திருக்காங்க. 1960ல புரட்சி வந்துதான் இந்தியர்கள் எண்ணிக்கை 4000ல இருந்து 400 ஆ குறைஞ்சிருக்கு.



திரும்ப வரும் வழில ஒரு சந்துல நிறைய தள்ளு வண்டிங்க இருந்துச்சு பக்கத்துல போயி பார்த்தா எல்லாம் சீ புட் விக்கற கடைங்க எல்லா வெளி நாட்டு காரங்களும் அங்கதான் இருக்காங்க. நாங்களும் போயி புதுசா என்னவோ தான்சானியா பிட்சானு விக்கறாங்ளே வாங்கி பார்ப்போம்னு வாங்குனா நல்லாதான் இருக்குது. நம்ம ஊருல ​போளினு ஒன்னு செய்வாங்கள்ள அதே மாதிரி ஆனா முட்டயெல்லாம் போட்டு சூப்பர் டேஸ்ட்டா இருந்துச்சு. அப்புறம் நண்டு, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கறி இன்னும் என்ன என்னவோ குவிச்சு வெச்சு இருக்காங்க. நாங்க போட்டோ மட்டும் எடுத்திட்டு ஓடி வந்திட்டோம். திரும்ப பழைய கடைக்கு வந்து க்ரில் சிக்கன், சிப்ஸ் சாப்பிட்டுட்டு வந்து தூங்கியாச்சு. இப்படியாக முதல் நாள் முடிஞ்சிடுச்சு.

ஆகா முடிஞ்சுடுச்சுன்னு சந்​தோச படாதீங்க.. இன்னமும் சில பாகம் வரும்.. :) :)

Wednesday, October 03, 2012

படித்ததில பிடித்தது


கார்வாலோவின் ​தேடல் ​-​தேஜஸ்வினி என்ற தமிழரக்க  நாவல் படிக்கும் வாய்ப்பு கி​டைத்தது. பல ஆண்டுகள் கழித்து படிப்பதா​லோ என்ன​வோ புத்தம் அரு​மையாக  இருந்தது. முதன் முதலாக காதல்,  குடும்ப சண்​டை, அரசியல், அறிவியல் கலக்காத எழுத்து ந​டை அரு​மையாக இருந்தது. க​​டைசியாக நான் உணர்ந்தது நாமும் நமது அடுத்து வரும்  த​லைமு​றைகளும் இயற்க்​கை எனும் மா​பெரும் ​சொர்க்கத்​தை விட்டு விலகிக் ​​கொண்​டே வருகி​​றோம். 

இந்த க​தையில் வரும் அ​னைத்து கதா பாத்திரங்களும் அவரவர் இயல்புகளில் இருந்து மாறாமல் இருப்ப​தே ஒரு தனி சு​வைதான். யாரும் தன் இயல்புகளில் இருந்து மாறுவதில்​லை  என்ப​தை ​தெளிவாக க​டைசி வ​ரை ​கொண்டு ​செல்கிறார்  எழுத்தாளர்.

தமிழ் ​​மொழியாக்கமும் நன்றாக​வே இருந்தது. இதில் வரும் கிவி என்ற நாயின் வாழ்க்​கை மு​றை முதற்​கொண்டு அ​னைத்து​மே எதார்த்தமாக அன்றாட வாழ்வின் நிகழ்வுக​ளைக் ​கொண்​டே நாவல் ப​டைக்கப்பட்டுள்ளது. ​​கொஞ்சம் வித்தியாசமான க​தை.


Saturday, July 09, 2011

ஆன கத,,,,



குழல் இனிதல்ல யாழ் இனிதல்ல தம் மக்கள் மழலைச் சொற்கள் முன்னால். அது நூறு சதம் உண்மையே. அதை அனுபவிச்சாதான் தெரியும். என் மகனுக்கு தற்போது 2 ஆண்டு முடிய போகிறது. தற்போது கதை கேட்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது. அதுதான் இந்த பதிவின் தலைப்பே.
தினமும் குறைந்தது 4 முறையாவது என் பையன் என்னிடம் "அம்மா ஆன கத" என்று கேட்காத நாள் இல்லை. உறங்கும் நேரம் தவிர அவனுக்கு மீதி நேரம் முழுக்க கதை கேட்பதில் அத்துனை ஆர்வம் அதிலும் குறிப்பாக யானை கதை மட்டும் வேண்டும். யானை போட்ட படங்கள், யானை கார்டூன், யானை வைத்து சொல்லப்படும் கதைகள் அனைத்தம் யானைதான்.
இந்த Iceage கார்டுன் பார்த்து பார்த்து எனக்கு ஒவ்வொரு சீனும் மனப்பாடமே ஆயிடுச்சு. பாவம் அந்த CD தேஞ்சே போச்சு. எப்ப பாரு ஆன கத ஆன கதனு கேட்டு இப்பவெல்லாம் ஆனை வடை திருடிட்டு போயி மரத்து மேல உக்காந்துதுனு சொன்னாலும் கேட்டுக்கிறான். இந்த ஆனை வியாதி எப்ப முடியும்னு தெரியல.
இவனுக்கு கதை சொல்ல போக நெட்டுல யானை பத்தி தேடி தேடி படிச்சுட்டு இருக்கேன். அதுல கிடைச்சதுதான் யானை டாக்டர்.

Wednesday, July 06, 2011

யானை டாக்டர்

யானை டாக்டர் நேத்துதான் படிச்சேன் என்னால அதை பற்றி எழுதாம இருக்க முடியல. உண்மையில ஒரு நல்ல விசயம் படிச்ச திருப்தி இருந்துச்சு. நாம எதை வெற்றினு நினைக்கிறோமோ அது இயற்கைக்கு முன்னாடி ஒன்னுமே இல்லாத விசயமா ஆயிடுது.
அணுகுண்ட சமாளிச்சு வெற்றி பெற்ற ஜப்பான் கூட இயற்கைய பாத்து பயந்துதான் நிக்குது. நாம இன்னும் தெரிஞ்சு அனுபவிக்க பல விசயங்கள இயற்கை தன்கிட்ட வெச்சு இருக்கு. இயற்கைய நேசிக்க ஆரம்பிச்சா நம்மளோட போட்டி பொறாமை எல்லாம் கொஞ்சம் தணியும்கிறது என்னோட எண்ணம்.

Friday, April 03, 2009

குங்குமப்பூ


வணக்கம் மக்களே பதிவுனு ஒன்னு எழுதி பல மாதங்கள் ஆச்சு. இப்ப வந்ததுக்கு காரணம் பழையபடி பூ பத்தி எழுததான். நானும் பல விதமான பூக்கள பத்தி எழுதிட்டேன். ஆனா இப்ப ஒரு குறிப்பிட்ட பூவ பத்தி எழுதற நேரம் வந்தாச்சு. ஆமாங்க நாம இப்ப பார்க்க போறது குங்குமப்பூ.
குங்குமப்பூ அப்படினா நமக்கு உடனே ஞாபகம் வரது தமிழ் படத்தில வர்ர சீன்தான் குழந்தை கலரா பிறக்கனும்னா குங்குமப்பூவ பால்ல கலந்து குடிக்க சொல்லுவாங்க. அது தவிர இந்த பூவ பத்தி வேற ஒன்னும் தெரியாது. அது மட்டும் இல்ல நான் இது வரைக்கும் குங்குமப்பூனா குங்குமக் கலர்ல சிவப்பா இருக்கும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இப்பதான் தெரியுது குங்குமப்பூ பிங்க் கலர்ல சூப்பரா கீழ படத்துல இருக்கற மாதிரி இருக்கும்னு.






அப்புறம் நாம பயன் படுத்தறது குங்குமப்பூக்களின் இதழ்களை இல்ல. அதுக்கு உள்ள இருக்கற மகரந்த இதழ்கள் மட்டும்தான். மேல படத்தில இருக்கற பூவுக்கு உள்ள இருந்து வர சிவப்பு மகரந்தம்தான் நாம பயன்படுத்தற குங்குமப்பூ. 1500 மலர்களில் இருந்து எடுத்தா அதிக பட்சம் 50 மிகி அளவுதான் குங்குமப்பூ கிடைக்கும். அதனாலதான் அது விலை மிக அதிகமா இருக்கு.


குங்குமப்பூ பல வகைகளிலும் பயன்படுது மருத்துவம், சாயம், உணவு வகை தயாரித்தல், வாசனை திரவியங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன் படுத்தறாங்க.
குங்குமப்பூவினால நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும், காய்ச்சல், கல்லீரல் பாதிப்பு எல்லாத்துக்கும் மருத்தா பயன்படுது. ஆனா அளவுக்கு அதிகமாவோ அல்லது மருத்துவர் ஆலோசனை இல்லாமயோ பயன்படுத்துனா இது மிகக் கடுமையான உடல்நல பாதிப்புகளை உண்டாக்குமாம். அதனால அதிகமா உபயோகப்படுத்த கூடாது.

அது மட்டும் இல்லீங்க குங்குமப்பூ குழந்தைக்கு நிறத்தை குடுக்கும்னு எந்த உறுதியான தகவலும் இல்லை. ஆனா பெரியவங்களுக்கு அழகு சாதனப் பொருட்கள் செய்யும் போது பயன்படுத்தறாங்க.
எது எப்படியோ இந்த குங்குமப்பூ வழக்கம் போல எல்லா மலர்களையும் போலவே அழகா இருக்கு. பார்க்கவே ஆசையா இருக்கு.



Tuesday, September 23, 2008

ஆப்பிரிக்காவில் அனு

வணக்கமுங்க இந்த பதிவு ஒரு தொடர்பதிவு இதுல நான் இருக்கற நாடு அதாவது தான்சானியா அதோட சுத்துபட்டு நாடுகள், அவங்க வரலாறு,வாழ்க்கை முறை, மக்களோட அன்றாட வேலை எல்லாத்தையும் பத்தி முடிஞ்ச வரைக்கும் தெளிவா எனக்கு தெரிஞ்சத எழுத போறேன்.படிச்சுட்டு நல்லா இருந்தா கமெண்ட் போடுங்க இல்லைனாலும் கமெண்ட் போடுங்க மாத்திக்க முயற்சி பண்றேன். பொதுவா ஆப்பிரிக்கானாலே இன்னும் எல்லாரும் இருண்ட கண்டம் அப்படினுதான் நினைக்கறாங்க. இன்னும் இங்க மனிச கறி சாப்பிடறஆதிவாசிகள் குடியிருக்காங்க. இங்க போனா எதுவுமே கிடைக்காது அப்படி இப்படினு பல பயங்கர பயமுறுத்தல்கள் இருந்துகிட்டுதான் இருக்குஅது உண்மைனு நானும் கடந்த ஆறு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் நம்பிட்டுதான் இருந்தேன். இங்க வந்த பிறகுதான் சில உண்மைகள் புரியும்.சரி சரி கதைக்கு வரேன் வழக்கம் போல எங்கயோ சுத்திட்டு இருக்கேன்.


ஆப்பிரிக்கா அப்படினாலே மிகப் பெரிய கண்டம்னு எல்லாறுக்கும் தெரியும். சரி ஆனா இதுல மிக்பெரிய நிலப்பகுதி சகாரா பாலைவனம். அதாவது வடக்கு பகுதி, அதே வடகிழக்கு பகுதியில குறிப்பா எகிப்து, சூடான் இங்கயெல்லாம் நைல் நதி பாஞ்சு மிக மிக செழிப்பா இருக்குது.ஆப்பிரிக்காவ மொத்தமா ரெண்டு பாகமா பிரிக்கலாம் அதாவது பாலைவனத்துக்கு மேல வடக்கு பகுதி, பாலைவனத்துக்கு கீழ தெற்கு பகுதினு. இதுல பாலைவனத்துக்கு மேல உள்ள நாடுகள் நைல் நதி பாயறதாலயும், ஐரோப்பாவுக்கு ரொம்ப பக்கத்தில இருக்கறதாலயும் நல்ல முன்னேற்றத்தோட இருக்குது.அதே போல கிழக்கு பகுதியில கடலோரம் இருக்குற நாடுகளும் தென் ஆப்பிரிக்காவும் நல்ல நீர் வழத்தோடயும் ஆசியா அரேபிய நாடுகள்கூட தொடர்பு கொண்டு நல்லா வழமாதான் இருக்காங்க. இது எல்லாத்துலயும் பாவப்பட்டவங்க மேற்கு ஆப்பிரிக்காதான். ஏன்னா இவங்க அடுத்த கண்டத்தோட தொடர்பு கொள்ளனும்னா ஒன்னு மேற்கு பக்கம் அட்லாண்டிக் கடல்ல பல தூரம் கடந்து தென் அமெரிக்காவுக்கு வரனும் இல்லைனா கிழக்க பெரிய ஆப்பிரிக்க நிலப்பரப்ப கடந்து அரேபியா அல்லது ஆசியாவ அடையனும். ரெண்டு பக்கமுமே ரொம்ப தூரம்.அதனால முன்னேற்றம் கொஞ்சம் கம்மிதான் அங்கெல்லாம்.
இப்ப இந்த கண்டத்துல கிழக்கு கடலோரம் இருக்கற தான்சானியாங்கற நாட்டுலதான் நான் இருக்கேன். இந்த நாட்ட பத்திதான் நான் எழுத போறேன்.
அடுத்த பதிவுல சந்திக்கறேனுங்க நன்றி வணக்கம் இப்போதைக்கு :)

Wednesday, September 17, 2008

ஒரு சின்ன சந்தேகமுங்க

வணக்கம்,
இந்த பதிவுல ஒன்னுமே இல்லீங்க வெறும் டெஸ்ட் பதிவுதான் பல நாள் நான் என் வலைப்பக்கம் வரவே இல்ல அதான் ஒரு சந்தேகம் வலைப்பூ உயிரோட இருக்கா இல்லையானு ஒரு சின்ன சந்தேகம் அதான் இந்த பதிவு. சரி வந்தது வந்துட்டீங்க இந்த படத்தையும் பார்த்துட்டு போங்க.


இது தான்சானியாவுக்கு பக்கத்துல இருக்கற சான்சிபார்ங்கற தீவுல எடுத்தது. முடிஞ்சா இனிமேலாவது ஏதாவது எழுத முயற்சி செய்ய‍றேன். (ஆமா ஒவ்வொரு தடவையும் இததான சொல்லறேனு நினைக்கறீங்க :)

Saturday, April 12, 2008

மக்களாட்சி

பல நாளா நானும் யோசிச்சது உண்டு. இந்த ஜனநாயகம் அரசியல் அமைப்பு சட்டம், திட்டங்கள், கொள்கை, அறிக்கை இப்டியெல்லாம் எப்பபாரு மெனக்கெட்டு பேசிக்கறாங்க. இதுக்காக எல்லா அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கண்டபடி திட்டி திண்டாடி என்ன என்னமோ பண்ணி நிறைவேத்துறாங்களே. இதுக்கெல்லாம் ஏன் இப்டி கஷ்டப்படறாங்க. எதுக்கு வீணா வாதம் பிரதிவாதம் பண்ணி நேரத்தையும் பணத்தையும் வீணாக்குறாங்க இப்‍டியெல்லாம் யோசிச்சதுண்டு. ஏன்னா பள்ளிகூடத்துல இருந்து பாடங்கள பெறும்பாலும் இதை சுத்தியேதான் இருக்கும். ஆனா எந்த மாணவனும் அதை படிச்சு பயன் அடைஞ்சதா தெரியல இதுக்கு காரணம் நம்ம கல்வி சொல்லி தர முறை மாற வேண்டும் அல்லது விசயத்தை கொஞ்சம் சுருக்கி படங்கள் மற்றும் நடப்பு நிலவரத்தோட கம்பேர் பண்ணி சொல்லி தரனும். சரி விடுங்க அது கல்வி முறை மாற்றத்தில வருது. இப்ப தலைப்புக்கு வர்ரேன்.

திட்டம்னா முதன் முதல்ல இந்தியா சுதந்திரம் அடைஞ்சப்போ மக்கள் தொகை கிட்டதட்ட வெறும் 50கோடிதான் ஆனா பஞ்சம் வறுமை எல்லாம் நல்லா அமோகமா இருந்துச்சு இதை போக்க என்ன பண்ணலாம்னு சில நல்ல அரசியல்வாதிகள் ஐந்தாண்டு திட்டம்னு ஒன்னு கொண்டு வந்து எங்க எங்க முடியுதோ அங்க எல்லாம் அணைகளை கட்டி வாய்க்கால் வெட்டி நீர் பாசனத்தை பெறுக்கி உணவு உற்பத்திய பெறுக்கி இப்டி என்ன என்னவோ செஞ்சு உணவு பற்றாக்குறையில்லாம வறுமை அண்டாம இன்னிய மக்கள் தொகையிலயும் காலந்தள்ளற அளவு முன்னேற்றம் பண்ணியிருக்காங்க.

அதுக்கு பிறகு உள் கட்டுமானம் அதாங்க (Infra structure) போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு. இத பத்தி சொல்லவே வேண்டாம் யாராவது தப்பி தவறி மொபைல் போன் இல்லைனு சொன்னா ஒன்னு அவரு வெளிநாட்டுகாரரா இருக்கும் இல்லைனா பேச முடியாத குழந்தையா இருக்கும் அந்த அளவு பெறுத்துடுச்சு. போக்குவரத்தும் ஒன்னும் குறைஞ்சிடல கிட்டதட்ட எல்லா கிராமங்களும் போக்குவரத்து வசதில தன்னிறைவு பெற்றுதான் இருக்கு.

அது போக சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு இப்டி சொல்லிகிட்டே போகலாம். கண்டிப்பா 100 சதவீத தன்னிறைவு இல்லை. ஆனா கிட்டதட்ட முழு அளவு இருக்குது. சரி எதுக்கு இப்போ இந்த விளம்பரம்னு கேட்கறீங்களா? ஒன்னும் இல்லீங்க திட்டம்னு ஒன்னு போட்டா அதை நிறைவேத்தி செயல் படுத்த கொஞ்ச காலம் ஆகும். ஏன்னா எத்தனையோ அரசு அலுவலகங்களை தாண்டி மக்களை வந்தடையவே பல காலம் ஆகும். அது வரைக்கும் அரசாங்கம்னு ஒன்னு நிலையா இருந்தாதான் அந்த திட்டம் கடைசி குடி மகனுக்கும் வந்து சேர்ந்து கொஞ்சமாச்சும் ஆமை வேகத்திலயாவது முன்னேற முடியும், அதை விட்டுட்டு இந்த ஜனநாயம் எல்லாம் சுத்த தெண்டம். கம்முனு சர்வாதிகாரம்தான் நல்லதுஅல்லது வேற ஆட்சி முறைதான் நல்லதுனு இள ரத்தங்கள்லாம் கர்ஜணை பண்றாங்க ஆனா ஒரு விசயம் தெளிவா இருக்கனும் என்ன ஆட்சி நடந்தாலும் ஜனநாயகத்துலதான் பலன் ஆமை வேகத்துலயாவது நிஜமா கஷ்டப்படுற மக்களுக்கு போய் சேரும் அதை விட்டுட்டு குதிச்சா அது முக்கிய நகரங்கள்ள மட்டும்தான் பலன் அடைஞ்சு முன்னேறும். ஆனா சத்தம் இல்லாத கிராமங்கள் முன்னேறாது. அதனால மக்களே முடிஞ்ச வரைக்கும் ஜனநாயகத்தை பாதுகாக்க நம்மளால முடிஞ்ச கடமைய செய்யனும் இல்லீனா அடுத்த தலைமுறைக்கு ‍ரொம்ப சிரமமா போயிடும்.

எத்தனையோ ஓட்டைகள் இருந்தும் இப்படி பாராட்டவோ அல்லது திட்டவோ அல்லது மொக்கை போடவோ அனுமதிக்கும் மக்களாட்சிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்துடன் கூடிய ஒரு மொக்கை கட்டுரை சமர்ப்பணம்.

வாழ்க மக்களாட்சி..!!

Thursday, April 10, 2008

கற்கை நன்றே..!!

நான் கற்ற புத்தகங்களில் முக்கியமான சிலவற்றை குறித்த பகிர்தல்.
இதை நான் நமது புதிய இளைய தலைமுறைக்கு எனது ஆலோசனையாகவும் தெரிவிக்க விரும்புகிறேன். இதில் காந்தியின் சத்திய சோதனை போன்ற நீதிநெறி மற்றும் பகவத்கீதை போன்ற மதம், அரசியல் சார்ந்த தனிநபர் விருப்பு வெறுப்புகளை பேச போவதில்லை. உலக அறிவு மற்றும் பல்வேறு வெற்றி தோல்விகளையும், ஒற்றுமை மற்றும் விரோதங்கள் குறித்து சொல்லும் நூல்கள் இவை. தவிரவும் இவைகளை பின்வரும் வரிசையில் படிப்பதால் உலக அறிவும் வளரும் என்றே அசட்டு நம்பிக்கையும் உள்ளது.

நீரினுள் எழும்பி வெடிக்கும் காற்று குமிழி போல...
- நேரு


1. நேருவின் உலகவரலாறு பாகங்கள் 1 & 2
தனது பதின்ம வயது மகளுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பே என்றாலும்
பலமடங்கு வயதான நமக்கும் வியப்பான ஒரு நூலே. இது புத்தகமாக வெளி வந்த சமயத்திலேயே தமிழாக்கம் (திரு.அழகேசன் என்பது சரி என்றே எண்ணுகிறேன்) செய்யப் பட்டுவிட்டது. ஒரு தந்தை தன் குழந்தைக்கு சொல்லும் அதே பாங்குடன் உலகை குறித்த வரலாற்றை விவரிக்கிறார். பல்வேறு மொழிகள், மதங்கள், இராச்சியங்கள் என்று அனைத்தையும் கால வெள்ளத்தினுள் நீந்திவாறே விளக்குகிறார்.

அவருடைய கொள்கைகளை மறந்து படிக்க ஆரம்பித்தால் மிக அருமையான நூல் இது. எண்ணற்ற மதங்கள், மொழிகள், கொள்கை கோட்பாடுகள், இராச்சியங்கள் அனைத்தும் தோன்றி அழிந்த பாங்கினை விவரித்து வரும் போது மேலே சொல்லியுள்ள உவமையை காட்டுவார். மெய்சிலிர்க்க வைக்கும் தருணம். கிட்டதட்ட ஆங்கில அரசாங்கமும், அடிமை இந்தியாவும் என்ற வரைக்கும் இருக்கும்.

2. மதனின் - வந்தார்கள் வென்றார்கள்

கிட்டதட்ட இரு பாகங்களாக உள்ள உலக வரலாற்றின் சுருக்கி வரைதல் போன்று எளிய முறையில் சுவைபட விவரித்துள்ளார். தைமூரில் ஆரம்பித்து கிட்டதட்ட ஆங்கில ஆட்சி துவக்கம் வரை புத்தகத்தை கீழே வைக்க இயலாத அளவு சுவையுடன் கொடுத்துள்ளார். வண்ண வண்ண ஓவியங்கள் மிக அழகாக மனதை கொள்ளை கொள்ளும் வ‍கையில் இருக்கிறது.

3. கல்கியின் - சிவகாமியின் சபதம்

காலத்தே இரண்டாவதாக எழுதப்பட்டு இருந்தாலும் முதலில் படிக்க வேண்டியது. ஓவியக்கலை, சிற்பக் கலை, நடனக் கலை என்று எங்கு எந்த பக்கம் படித்தாலும் அரசியலும் , கலையும் சரியான போட்டி போட்டுக் கொண்டு இருக்கும். இவை தவிர அன்றைய தமிழர் தம் வாழ்வியல் முறைகள், போர் திட்டமிடல், ஒற்றாடல் என்று இன்றைய நவீன நாவல்களுக்கு சவால் விடும் வண்ணம் அமைந்திருக்கும்.

4. கல்கியின் - பார்த்தீபன் கனவு

கல்கியின் கிட்டதட்ட முதலாவது வரலாற்று நாவல். அளவில் சிறிதாக
இருப்பினும் படிக்க சுவையான எளிய கதை.

5. கல்கியின் - பொன்னியின் செல்வன் 1,2,3,4 & 5

சொல்லி தெரியவேண்டியதில்லை பொன்னியின் செல்வன் பெருமைகளை. யாவரும் படித்து இன்புறும வண்ணம் தமிழர் தம் வாழ்க்கை முறை, அது இது என எண்ணற்ற செய்தி குவியல்கள் நிலவறையினுள் உள்ள பொக்கிஷம் போல குவிக்கப் பட்டுள்ளது. உள்ளே போய் வர பயிற்ச்சி எடுத்தால் அனுபவிக்க ஏராளம், ஏராளம்...

6. நள்ளிரவில் சுதந்திரம்- வெளிநாட்டு ஆசிரியர்கள் (Larry Collins,Dominique Lapierre)

இந்திய சுதந்திர சமயத்தில் நடைபெற்ற சுவாரசியமான தகவல்கள் களஞ்சியம் என்றே சொல்லலாம். இன்றைய இந்திய டூடே புத்தகத்தின் அன்றைய முன்மாதிரியாக செய்தி திரட்டுவது மற்றும் வழங்கும் கோணங்கள் பிரமிக்க வைக்கிறது. நாம் எதிர் பாரா கோணங்கள் நமக்கு வெளிச்சமிடப் பட்டு காண்பிக்க படும் போது மிகவும் வியப்படைய வேண்டியிருக்கிறது. தமிழாக்கம் செய்ய பட்டு வெகு அருமையாக உள்ளது. தமிழாசிரியர் பெயர் அறிய இயலவில்ல‍ை.

மேற்க் கண்ட புத்தகங்களை மேற்க் கண்ட வரிசையிலேயே படிப்பது
நமக்கும், நம் வாரிசுகளுக்கும் பாரதம் மற்றும் பிற சமூகங்கள் குறித்த தேவையான அறிவை வழங்கும் என்றே எண்ணுகிறேன்.

Tuesday, April 08, 2008

ஊழல்

இந்தியர்கள் எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த ஊழல் வழக்கு உண்டென்றால் அது போபர்ஸ் பீரங்கி ஊழலதான்..இது நடந்த போது(1987) இப்போது இருக்கும் இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் பிறக்கவே இல்லை..இந்த வழக்கினால் காங்கிரஸ் கட்சி 1989ல் நடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவியது..ஆனால் அந்த ஊழல் வழக்கு மட்டும் இன்னும் நடந்துட்டு இருக்கு .கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் எதுவும் முடிவுக்கு வந்தபாடில்லை..போபர்ஸ் போல நிறைய ஊழல் வழக்குகள் நம் அன்றாட வாழ்க்கையில் வந்து போயிருக்கின்றன. இதுபோல பரபரப்பாகப் பேசப்பட்டு நம்மால் மறக்கப்பட்ட ஊழல்கள் குறித்தும், அந்த ஊழல்கள் சம்பந்தமாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தண்டனை பெற்றவர்கள் குறித்தும் இந்தப்பதிவில் சில விசயங்கள் எழுத எண்ணம்.


1. போபர்ஸ் ஊழல்- 64 கோடி


வழக்குப் பதிவு செய்யப்பட்ட தேதி-22-01-1990
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட தேதி- 22-10-1999

தண்டனை பெற்றவர்கள்--- தேடுராங்க,தேடுராங்க....தேடிட்டே இருக்காங்க.
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


2.HDW Submarine- 32.55 கோடி



வழக்குப் பதிவு செய்யப்பட்ட தேதி-05-03-1990
தண்டனை பெற்றவர்கள்--- தேடித்தேடி சலிச்சுபோய் ஒன்னும் பண்ண முடியாம சி.பி.ஐ வழக்கை மூடிச்சுக்கறோம் அனுமதி கொடுங்கனு நீதி மன்றத்தில் முறையிட்டிருக்கிறார்கள்.

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


3. பங்குச்சந்தை ஊழல்- 4100 கோடி



வழக்குப் பதிவு செய்யப்பட்ட தேதி - 72 வழக்கு.(1992 - 1997 வரை)
குற்றம் சாட்டப்பட்டவர்கள்--- 4 பேர்(ஹர்சத் மேத்தா உட்பட)

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


4. ஏர்பஸ்(Airbus) ஊழல்- 120கோடி



வழக்குப் பதிவு செய்யப்பட்ட தேதி- 23-03-1990
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட தேதி- இன்னும் தாக்கல் செய்யப்படவில்லைதண்டனை பெற்றவர்கள்--- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


5.இந்தியன் வங்கி ஊழல்- 762.92 கோடி


வழக்குப் பதிவு- 45 (1992ல் இருந்து)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 27 நபர்கள் மீது

தண்டனை பெற்றவர்கள்--- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


6.ஹவுஸிங் ஊழல்- 65 கோடி


வழக்குப் பதிவு- 11/03/1996

குற்றப் பத்திரிக்கை தாக்கல் -தண்டனை பெற்றவர்கள்-- நான்கு இளநிலை ஊழியர்கள் மட்டும்
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


7.கால்நடைத் தீவன ஊழல்- 950


கோடிவழக்குப் பதிவு- மார்ச் 1995லிருந்து (64 வழக்கு)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் -63

தண்டனை பெற்றவர்கள்-- ஒரே வழக்கில் மூன்று அதிகாரிகள் மட்டும்
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


8.பெட்ரோல் பங்க் ஊழல்- 950கோடி


வழக்குப் பதிவு- நவம்பர் 1996 -1997 (15 வழக்கு)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


9.யூரியா ஊழல்- 133கோடி



வழக்குப் பதிவு- 28/05/1996

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 26/12/1997
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


10.சி.ஆர்.பி(CRB) ஊழல்- 1031கோடி


வழக்குப் பதிவு- 20/05/1997

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 02/09/1997
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


11.டெலிகாம் ஊழல்- 1200கோடி


வழக்குப் பதிவு- ஆகஸ்ட் 1996

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 4

தண்டனை பெற்றவர்கள்-- ஒருவர் மட்டும்

கைப்பற்றப் பட்ட பணம்- 5.36 கோடி


12.யுடிஐ(UTI) ஊழல்- 9500கோடி



வழக்குப் பதிவு- ஜூலை 2001(1 வழக்கு)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 2004 வரை
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


13.கே.பி ஊழல்(KAY PEE)- 3128கோடி


வழக்குப் பதிவு- மார்ச்&மே 2001(மூன்று வழக்கு)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - இரண்டு
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


14.வீடு விற்பனை (Home Trade) ஊழல்- 1200கோடி



வழக்குப் பதிவு- 10/05/2002

குற்றப் பத்திரிக்கை தாக்கல் -இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


இதெல்லாம் சும்மா சில கூகிள் தேடல் மூலமும், சில கட்டுரைகள் உதவியுடனும் கிடைத்த தகவல்கள்..சரி, என்னோட ஒரே ஒரு கேள்வி என்ன என்றால் இந்திய மக்களாகிய நாம் ஊழல் என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்றே நினைக்கிறேன்?...அதை விசாரிக்கிறேன் பேர்வழி என்று சொல்லி எதற்கு நம் வரிப்பணத்தையும், நேரத்தையும் வீணாக்கவேண்டும்?

Monday, April 07, 2008

மணற்கோவில் - கைலாச நாதர் கோவில்

பல்லவ நாட்டின் தலைநகரான காஞ்சியில் அமைந்துள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்று தென்திசைக் கைலாயம் எனும் கைலாசநாதர் கோயில் ஆகும். இந்த ஆலயம் கட்டிட கலையின் முக்கியமான ஒரு வகையாகும். கல்வெட்டு இக்கோயிலை "கச்சிப்பேட்டுப் பெரிய திருக்கற்றளி" ன்றழைக்கிறது.மணற்சிலைகள் கண்ணை கவரும் விதத்தில் காலத்தே சிறிது சிதைவுற்று அழகுற விளங்குகின்றன.

(அனைத்து படங்களையும் சொடுக்கினால் முழுமையான பெரிய அளவிலான ஒளிப்படத்தை காணலாம்.)


ஒளிபடம் (1) கோவிலின் முழு உருவத்தை காட்டுகிறது. கோவில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுபாட்டில் உள்ளதால் சுற்றிலும் அழகிய புல்வெளி பராமரிக்க பட்டுவருகிறது.

ஒளிபடம் (2) கோவிலின் முன்நுழைவாயில் அருகே உள்ள கோபுரமாகும்.
இதன் இருபுறமும் உள்ளே நுழைய வழிகள் உள்ளன. பொதுவாக மற்ற கோவில்களில் கோபுரத்தின் வழியே நுழைவதாக இருக்கும்.







ஒளிபடங்கள் (3,4) உள்சுற்றுபுற பிரகாரங்கள் ஆகும். இவைகள் முழுக்க முழுக்க சிற்பங்கள் நிறைந்துள்ளன. மணற் சிற்பங்கள் (சுதை) என்ற வகையில் அமைந்துள்ளன.



ஒளிபடம் (5) ஒரு சிதைந்த சிற்பத்தைக் காட்டுகிறது. மற்ற அங்கங்கள் அனைத்தும் சரியே பெற்று தங்கள் முகத்தை மட்டும் காலதேவனின் இரக்கமற்ற அலட்சியத்தால் இழந்து விட்ட இந்த நடன ஜோடியினரை எண்ணினால் மனம் பதைக்கிறது.





ஒளிபடம் (6) நடனத்தின் அழகை துல்லியமாக காட்ட முயன்றுள்ள சிற்பியின் திறனை கண்டு நாம் வியக்காமல் இருக்க இயலாது அல்லவா..? எத்தனை எத்தனை கற்பனையை நம் கண் முன் கொண்டு நிறுத்தியுள்ளனர் சிற்பி...



ஒளிபடம் (7) அன்றிலிருந்து இன்று வரை நம் பாரதம் கலாச்சாரத்தில் பிண்ணி பிணைந்தவை என்பதை உணர்த்தும் சிற்பம். இன்று பாரதத்தின் தேசிய சின்னமாக உள்ள நான்கு சிங்கங்களின் முன்மாதிரியாக உள்ள சிற்பம்.




ஒளிபடம் (8) இங்கு எதைச் சொல்ல எதை விட..? ஒரே இடத்தில் சிங்கங்கள், யானைகள், ஆடல் மகளீர், வதம் செய்யும் காட்சி, மற்றும் பிற உப குள்ளர்கள் போன்றவைகளை காட்டி தன் முழு திறனை வெளிகாட்டியுள்ளார் சிற்பி.

ஒளிபடம் (9) கோவிலின் சுற்று சுவரில் உள்ள காவல் சிற்பங்கள். எண்ணற்ற சிற்பங்கள் வகைவகையாய் அமைந்துள்ளன. விலங்குகள் மீதமர்ந்துள்ள காவற் வீரர்கள் என மிகவும் தத்துரூபமாய் அமைக்கபட்டு நம்மை வியக்க வைக்கிறது.




குறிப்பு : இந்த தலமானது தற்கால புகழ்பெற்ற காமட்சி அம்மன் கோவில் போன்றவைகளிலிருந்து சற்றே விலகியுள்ளது. நகர மையத்திலிருந்து 4கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மக்கள் அதிகம் செல்லாத காரணத்தால் அதிக கடைகள் மற்றும் உணவுவிடுதிகள் அருகில் இல்லாத குறையுண்டு.

Wednesday, February 27, 2008

சிற்சில கணங்களில்...

சில எதிர்பார்ப்புகள் முடக்கப்படுகின்றன
சில எதிர்பார்ப்புகள் தேவையற்று போகின்றன
சில எதிர்பார்ப்புகள் தேய்ந்து மறைந்துவிடுகின்றன
சில எதிர்பார்ப்புகள் கேள்வி குறியாகின்றன
சில எதிர்பார்ப்புகள் நடந்தும் விடுகின்றன
சில எதிர்பார்ப்புகள் தோற்கின்றது - ஆனாலும்
பல எதிர்பார்ப்புகள் தினம் தோன்றுகின்றன
தினம் தோன்றி மறையும் விண்மீன்களை போல.


இதை கவிதைனும் எடுத்துக்களாம் மொக்கைனும் எடுத்துக்கலாம். ஆனா ஏனோ எனக்கு நம்ம ராசா எழுதுன இந்த பதி ஞாபகம் வருது.

Monday, January 28, 2008

பிரிவோம் சந்திப்போம் - என் பார்வையில்

போன வாரம் படம் பார்க்கலாம்னு முடிவு பண்ணவுடனே. பில்லா பீமா எல்லாம் அடிதடியா இருக்கும் இந்த படம் கொஞ்சம் குடும்ப பாங்கா இருக்கும்னு போனேன். அது மட்டும் இல்ல விகடன்ல வேற இந்த படத்துக்காக காரைக்குடில போட்ட செட்டு. அங்க அவங்க நடத்துன கல்யாணம் எல்லாம் விலாவாரியா எழுதி கொஞ்சம் எதிர் பார்ப்ப ஏத்தி விட்டிருந்தாங்க.
படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் வரைக்கும் பொண்ணு பார்க்க போறது. கல்யாணம் இப்டியே போயிடுச்சு. நான் நினைச்சேன். இதென்ன கொடுமையிது
ஒரு கல்யாணத்த காட்டறதுக்கு ஒரு படமானு நினைச்சேன். அப்புறம் இடை‍வேளைக்கு பிறகு கொஞ்சம் அவங்க தனியா போனப்புறம் தினமும் சாப்பிடறது சமைக்கிறது இப்டியே இருந்துச்சு. இதெல்லாம் பார்த்துட்டு எங்க அண்ணாவேற இததான தினமும் வீட்டுல பார்க்கறோம் இதுக்கு போயி செலவு பண்ணி இங்க வந்து பார்க்கணுமான வேற டயலாக்கு.
ஆனா படம் முக்கால்வாசி போன பிறகுதான் தெரிய வருது எடுத்துகிட்ட
நோக்கம். ஆனா அதை புரிய வைக்கறதுகாக கொஞ்சம் இழுத்துட்டே போயிட்டாரு கதைய. ஆனா வேற வழியில்ல இந்த விசயத்தை இந்த மாதிரி கொஞ்சம் இழுத்து சொன்னாதான் தெளிவா புரியும். கண்டிப்பா இந்த படத்தை
தொலைகாட்சில ரிமோட்டோட பார்த்தம்னா ஒன்னுமே இல்லனு சொல்லிட்டு
போயிடுவோம். திரையரங்குல உக்காந்து வேற வழியே இல்லனு பார்த்தாதான் இந்த படத்‍தோட விசயம் விளங்கம். தனிமை கொடுமைங்கறதுதான் எடுத்துகிட்ட விசயம். அதுக்காக கொஞ்சம் மெனக்கெட்டு எடுத்திருக்காரு படத்தை.

பாராட்ட வேண்டியது :
1. இயல்பான கதை அமைப்பு, நடிப்பு, காஸ்ட்யூம்.
(நான் நினைக்கிறேன் எல்லா நடிகர்களையும் அவங்க அவங்க வீட்லயிருந்து கிளம்பி வர சொல்லி அவங்க போட்டிருக்கிற ட்ரெஸ்ல அப்டியே படம் எடுத்திருப்பாரு போல இருக்கு :) )

2. எடுத்துகிட்ட விசயத்துல கொஞ்சமும் மாறாம அப்டியே கடைசி வரைக்கும் அப்டியே கொண்டு போனது.

3. எல்லாருமே நல்லவங்கனு காட்டுனது. சண்டை காட்சி இல்லாதது. அப்புறம் முக்கியமா ஒரு எடத்துலகூட துப்பாக்கியோ அல்லது அரிவாளோ காட்டாம படம் எடுத்ததுக்கு நன்றி.

குறைகள் :
1. முக்கியமான விசயம் கதைய ரொம்ப ஸ்லோவா நகர்த்தியிருக்கிறது. (ரொம்ப கஷ்டம் அடங்கி 2.30 மணி நேரம் உட்கார்ந்து பார்க்கறது. அதுலயும் ரிமோட் இல்லாம ரொம்ப கஷ்டமப்பா )

Sunday, January 20, 2008

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே

வணக்கம் மக்களே மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு போடலாம்னு வந்திருக்கேன். தற்போதைய நிலைமையில் எனக்கு பதிவு போர் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு. சரி இருந்தாலும் இது அவசியம்னு நினைச்சதால எழுதறேன்.
இந்த வருட ஆரம்பத்திலிருந்து ஒரு கேள்வி அடிக்கடி பதிவுலக நண்பர்கள் கேட்டுக்கிட்டே இருக்காங்க. அது என்னா கேள்வினா

பெண் பதிவர்கள் ஏன் தங்களுடைய புகைப்படத்தை பதிவுகளில் அல்லது ப்ரொபைலில் போடுவதில்லை?

இது தான் கேள்வி இது பல தடவை நேர்லயும் சிலரால் சாட்டிங்கிலும் கேட்கப்பட்டு விட்டது. நானும் என்னவோ பதில் சொல்லிட்டேன். இருந்தாலும் மத்தவங்களுக்கும் இது ஒரு பயனுள்ளதா (ஆமா நாட்டுக்கு ரொம்ப தேவைனு சொல்றது காதுல விழுது :) ) இருக்கும்னு இங்க எழுதறேன்.

1. பதிவு எழுதவர்ரவங்க அவங்களோட கருத்துகளை அடுத்தவங்ககிட்ட பகிர்ந்துகனும்னுதான் எழுத வராங்க. இதுல படத்த பார்த்து ஒன்னும் ஆக போறது இல்ல.

2. அப்ப‍டியே படம் போட்டு பேர் வாங்கனும்னு நினைச்சா அதுக்கு மாடலிங், நடிப்புனு நிறைய மத்த துறைகள் இருக்குது. இங்க பதிவு எழுதனும்னு அவசியம் இல்ல.

3. அப்புறம் சிலர் ‍கேட்கறாங்க முகமிலிகூட எப்டி பேச்சுவார்த்தை வெச்சுக்கிறது. நட்பு எப்படி சாத்தியம்னு கேட்கறாங்க. இதுக்கு என் பதில் ஏன் குறிப்பா பெண்களை மட்டுமே கேட்கறீங்க இன்னும் பல ஆண் பதிவர்களும்தான் முகமிலியா இருக்காங்க. அதுக்காக உங்க நட்புல ஏதாவது தடை ஏற்பட்டு இருக்குதா?

4. இன்னும் சிலர் இப்டி தங்கள் புகைப்படத்தையே வெளியிடாதவங்க எப்டி சமூகத்த பத்தி எழுத முடியும்னு கேட்கறாங்க. ஏனுங்க பதிவு எழுதறதே அவங்கவங்க இஷ்டத்துக்கு அவங்க கருத்துகளை தெரிவிக்கதானே தவிர சமூகத்தை சீர் திருத்தறதுக்காக இல்ல. அப்டியே இருந்தாலும் சமூக சிந்தனைக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்னு புரியல.

5. இதெல்லாத்தையும் விட முக்கியமா நம்ம படத்தை பார்த்து அடுத்தவங்க பயப்பட கூடாதுங்கற ஒரு சமூக அக்கறைனு கூட சொல்லலாம். (பெண்களோட நல்ல மனச புரிஞ்சுக்கோங்க :) )

Tuesday, January 01, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2008


என் இனிய வலை உலக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இனி வரும் ஆண்டுகளில் மேலும் மேலும் நட்பும் உருபடியான பதிவுகளும் பெருக வாழ்த்துகின்றேன். :)